இரு திரைகள் கொண்ட உயர்தர நோட்புக்கை அறிமுகம் செய்யும் ஆசஸ் நிறுவனம்
2012ல் நடைபெற்ற கம்பியூடெக்ஸ் நிகழ்வில் ஆசஸ் நிறுவனம் ஒரு உயர்தர நோட்புக்கை அறிமுகம் செய்து வைத்தது. தற்போது இந்த நோட்புக்கை இந்தியாவில் ரூ.1,39,999க்கு ஆசஸ் களமிறக்கி இருக்கிறது. இந்த உயர்தர நோட்புக்கிற்கு டாய்ச்சி என்று பெயர் சூட்டப்பட்டிருக்கிறது. இந்த உயர்தர நோட்புக் பல ஏராளமான தொழில் நுட்ப வசதிகளுடன் வருகிறது. குறிப்பாக டச் வசதி கொண்ட இதன் 11.6 இன்ச் 2 டிஸ்ப்ளேகள் மிகவும் அமர்க்களமாக இருக்கும்.
இரண்டு திரைகளும் ஒரே நேரத்தில் வேலை செய்யும். அதுபோல் இரண்டு திரைகளும் முழு எச்டி 1080பி ரிசலூசனைக் கொண்டிருக்கின்றன.
இந்த நோட்புக்கில் இன்டலின் புதிய கோர் ஐ7 மற்றும் ஐ5 சிபியுக்கள் உள்ளன. மேலும் 4ஜிபி டிடிஆர்3 ரேம், 128ஜிபி மற்றும் 256ஜிபி சாலிட் ஸ்டேட் மெமரி, 5எம்பி பின்பக்க கேமரா மற்றும் 720பி வீடியோ வசதி கொண்ட வெப் கேமரா ஆகிய வசதிகளும் உள்ன.
மேலும் இந்த நோட்புக் விண்டோஸ் 8 இயங்கு தளத்தில் இயங்குகிறது. அதோடு இந்த நோட்புக்கில் க்ராபிக்ஸ் வேலைகளையும் மிக சூப்பராக செய்ய முடியும்.
0 comments :
Post a Comment