கிழக்கு பல்கலைக்கழகத்திலும் மாவீரர்தின சுவரொட்டிகள்.
பின்னணியில் அரியநேந்திரன்-ஜனா குழுவினர்
கிழக்குப் பல்கலைக் கழகத்தில் இன்று மாவீரர்தினத்திற்கான சுவரொட்டிகள் சில ஒட்டப்பட்டிருந்தன. இவற்றை யார் ஒட்டினார்கள் என்பது தொர்பான செய்திகள் கசிய ஆரம்பித்திருக்கின்றன.
யுத்தம் ஓய்ந்து மக்கள் நிம்மதிப் பெருமூச்சு விட்டுக் கொண்டிருக்கும் இவ்வேளையில் தமிழ் மக்கள் மீண்டும் ஒரு யுத்தத்தை விரும்பவில்லை. ஆனாலும் சிலர் தமது சுகபோக அரசியல் வாழ்க்கைக்காக அப்பாவி இளைஞர்கள் சிலரை வைத்து புலிகள் இயக்கம் இப்போதும் இருப்பது போல் காட்டிக் கொள்ள நினைக்கின்றனர்.
தமிழ் தேசியக் கூட்டமைப்பினரைப் பொறுத்தவரை யுத்தம் ஒன்று இருந்தால்தான் மக்களை ஏமாற்றி அரசியல் நடாத்த முடியும். அதன் ஒரு வெளிப்பாடாகவே மாவீரர்தின சுவரொட்டிகள் யாழ் பல்கலைக்கழகத்திலும் கிழக்கு பல்கலைக் கழகத்திலும் ஒட்டப்பட்டிருக்கின்றன.
யாழ் பல்கலைக் கழகத்தில் குதிரைக் கஜேந்திரனின் அடிவருடிகள் சிலர் இந்செயலை செய்திருக்கலாம் எனவும் இதற்கும் தமக்கும் எந்த தொடர்பும் இல்லை எனவும் யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் தெரிவிக்கின்றனர்.
இதேநேரம் யாழ் பல்கலைக்கழகத்தில் ஒரே ஒரு ஏ4 அளவிலான சுவரொட்டி ஒன்று ஒட்டப்பட்டுள்ளது. ஆனால் இவ்விடயத்தை ஊதிப்பெருப்பிக்கும் ஊடகங்கள் சில வீர வாக்கியங்கள் பலவற்றை எழுதி இவ்வாக்கியங்களும் அங்கு எழுதப்பட்டுள்ளதாக கதை விடுகின்றனர்.
கிழக்கு பல்கலைக் கழகத்தில் நடந்தது என்ன?
கடந்த சில நாட்களாக அரிய நேந்திரன் அவர்கள் மட்டக்களப்பில் மாவீரர்தின நிகழ்வுகளை நடாத்த ஏற்பாடுகள் செய்து வருவதாக செய்திகள் வெளியாகி இருந்தன. இவை உண்மையான தகவல்கள் என உறதியாகியுள்ளது.
பாராளுமன்ற உறுப்பினர் அரியநேந்திரன் அவர்களும் மாகாணசபை உறுப்பினர் ஜனா அவர்களும் தமக்கு நெருக்கமான 7 பேரைக் கொண்ட ஒரு குழுவினை பயன்படுத்தி மட்டக்களப்பு மாவட்டத்தில் முக்கிய இடங்களில் மாவீரர் தின சுவரொட்டிகளை ஒட்டுவதற்கு திட்டமிட்டிருக்கின்றனர்.
இதன் அடிப்படையில் கிழக்குப் பல்கலைக் கழகத்தில் ஒட்டப்பட்டிருக்கின்றது. இன்று இரவு பல பகுதிகளில் ஒட்ட தீர்மானித்திருப்பதாகவும் அறிய முடிகின்றது.
இதன் மூலம் இவர்கள் சாதிக்க முயல்வது என்ன?
புலிகள் இருக்கின்றனர் என்பதனைக் காட்டிக் கொள்ள நினைக்கின்றனர். இதனால் இராணுவத்தினர் தமிழ் இளைஞர்களை விசாரிப்பார்கள், அடிப்பார்கள். இதனை வைத்து அரசியல் நடாத்தும் திட்டமே.
இந்த அரசியல் நயவஞ்சகர்களின் வலையில் சிறிலங்கா படைகள் வீழ்ந்துவிடாது என நாம் நிச்சயமாக கூறிவிடமுடியாது..
அவர்களும் தமிழ் இளைஞர்களை பிடித்து அடித்து உதைக்கத்தான் போகின்றனர்.
1 comments :
Why not we chase out a chronic politician like him out of politics and society.
Post a Comment