இந்தியாவிற்கு யுரேனியம் வழங்க தயார் கனடா பிரதமர்
இந்திய அணு உலைகளுக்கு தேவையான யுரேனியத்தை கனடா வழங்கும் என கனடா பிரதமர் ஸ்டீபன் ஹார்ப்பர் தெரிவித்துள்ளார்..கனடா பிரதமர் ஸ்டீபன் ஹார்ப்பர் இந்தியாவிற்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டு வருகிறார். இந்த சுற்றுப்பயணத்தின் போது இந்தியா- கனடா நாடுகளுக்கிடையிலான வர்த்தகம், பாதுகாப்பு, நல்லுறவு தொடர்பாக இருநாட்டு பிரதமர்களும் பேச்சு வார்த்தை நடத்தினர்.
அணு உலை செயல்பாட்டுக்கு தேவைப்படும் மூலப்பொருளான யுரேனியம் அதிகமாக கிடைக்கும் நாடுகளில் கனடா முதலிடம் வகிக்கின்றது.
இந்திய அணு உலைகளுக்கு தேவையான யுரேனியத்தை தொடர்ந்து வழங்குவதாக கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்னர் கனடா, இந்தியாவுடன் ஒப்பந்தம் செய்து கொண்டது.
இருப்பினும் நாங்கள் வழங்கும் யுரேனியத்தை அழிவுக்கான நோக்கங்களுக்கன்றி, ஆக்கப்பூர்வமான தேவைகளுக்காக மட்டுமே இந்தியா பயன்படுத்தும் என்பதை உறுதிப்படுத்திக் கொண்ட பின்னரே நாங்கள் யுரேனியத்தை வழங்குவோம் என்று கனடா கூறி வந்தது.
இந்நிலையில் உடனடியாக இந்தியாவுக்கு யுரேனியம் வழங்க முடிவு செய்து, ஒப்பந்தம் நேற்று கையெழுத்தானது.
0 comments :
Post a Comment