ஒரினச் சேர்க்கைக்கு பிரான்ஸ் அமைச்சரவை அங்கீகாரம்
பல்வேறு சர்ச்சைகள் மற்றும் எதிர்ப்புக்களுக்கு மத்தியில் ஓரின சேர்க்கையாளர்களின் திருமணத்துக்கு பிரான்ஸ் அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. பிரான்ஸ் நாட்டில், ஓரின சேர்க்கையாளர்கள், தங்கள் திருமணத்தை அங்கீகரிக்க வேண்டும் எனத் தொடர்ந்தும் கோரி வருகின்றனர். இந்த விவகாரமானது கடந்த பிரான்ஸ் அதிபர் தேர்தலிலும் எதிரொலித்தது. பெரும்பாலான மக்கள் ஓரின சேர்க்கை திருமணத்தை ஆதரிக்கின்றனர் என்ற கருத்து வலுப்பெற்று வந்தது.
ஆனால் இதற்கு கிறிஸ்த மதத் தலைவர்கள் உள்ளிட்ட தலைவர்கள் சிலர் இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
அமெரிக்காவின் ஒரு சில மாகாணங்களில் ஏற்கனவே ஓரின சேர்க்கையாளர் திருமணத்துக்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.
இதை கருத்தில் கொண்டு, பிரான்ஸ் அமைச்சரவையும், ஓரின சேர்க்கையாளர் திருமணத்தை சட்ட ரீதியாக அங்கீகரிக்கும் தீர்மானத்துக்கு ஒப்புதல் அளித்துள்ளது. விரைவில் இந்த சட்டம் பாராளுமன்றில நிறைவேற்றப்படும் என்று பிரான்ஸ் அரசு அறிவித்துள்ளது.
1 comments :
It's a surprise how a religious country go against their religious preachings.There may be many unsual changes followed this unusual homosexual approval.
Post a Comment