பேய் திருவிழாவில் மூன்று பெண்கள் பலியெடுப்பு
ஸ்பெயின் நாட்டில் கொண்டாடப்பட்ட பேய் திருவிழாவான ஹாலோவீன்;(Halloween)விழாவில் கூட்ட நெரிசலில் சிக்கி மூன்று இளம் பெண்கள் பலியுள்ளர் பெரும்பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.பேய் வேடமணிந்து தீ மூட்டி கெட்ட ஆவிகளை விரட்டும் சடங்குகள் ஹாலோவீன் விழா நடத்தப்படுவது வழக்கம். அதேபோல் அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் இந்த விழா கொண்டாடப்படுகிறது.
ஸ்பெயின் நாட்டின் மேட்ரிட் நகரில் உள்ள மைதானத்தில் நேற்று முன்தினம் இரவு நடந்த இந்த விழாவில் 10 ஆயிரத்திற்கும் அதிகமான மக்கள் கலந்து கொண்டனர். இந்த விழாவையொட்டி ஆடல், பாடல் மற்றும் உற்சாகபான நிகழ்ச்சிகளும் நடந்தன.
இதில் திடீரென சிலர் தீ பந்தத்தை பார்வையாளர்கள் மீது வீசியதாக கூறப்படுகிறது. இதனால் பயந்து போன மக்கள் அலறியடித்து வெளியே ஓடினர்.
ஒரே நுழைவாயில் என்பதால், இதன் வழியாக பலரும் வெளியே முயன்றதால் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி மூன்று இளம் பெண்கள் பலியாயினர், பலர் காயமடைந்தனர்.
0 comments :
Post a Comment