போரில் பங்காற்றிய ஜெற்லைனருக்கு பிரியாவிடை
புலிகளுடனான யுத்தத்தின் போது அதீத சேவையாக கடற்படையினரைக் காவிச் சென்ற துருப்புக்காவி கப்பலாக செயற்பட்ட ஜெட்லைனர் தனது இறுதி பயணத்தை மேற்கொண்டது. இந்த கப்பல் இராணுவ தேவைகளுக்கு2006 ஆம் ஆண்டு முதல் சுமார் குத்தகை அடிப்படையில் இந்தோனிய நிறுவனம் ஒன்றிடமிருந்து பெற்பட்டு 6 வருடங்கள் பயன்படுத்தப்பட்ட பின்னர் அக்கப்பலை கையளிப்பதற்கு இலங்கை கடற் படையினர் தீர்மானித்துள்ளனர்.
ஒரே நேரத்தில் 3,000 படையினரை ஏற்றிச்செல்லும் வசதிகளை கொண்ட இந்த துருப்புக்காவி கப்பல், வடக்கிற்கும் கிழக்கிற்கும் இடையில், இலங்கை படையினரையும் பொருட்களையும் விரைவாக ஏற்றி இறக்குவதற்கு உதவியாக இருந்தது என கடற் படை பேச்சாளரான கொமாண்டர் கோசல வர்ணகுலசூரிய தெரிவித்தார்.
திருகோணமலையிலிருந்து காங்கேசன்துறைக்கு இந்த கப்பல் வாரத்துக்கு மூன்று தடவைகள் சேவையில் ஈடுபடுத்தப்பட்டது. 2009இல் போர்முடிவுக்கு வந்த பின்னர் உள்நாட்டு சேவைகளான கருத்தரங்குகள் மற்றும் விழாக்களை நடத்துவதற்கான மிதக்கும் அரங்கமாகவும் இது பயன்படுத்தப்பட்டு வந்தது.
இந்த கப்பல் கொழும்பு துறைமுகத்தில் இருந்து இந்தேனேசியாவுக்கு பயணத்தை இன்று மேற்கொண்டது என அவர் தெரிவித்தார்.
0 comments :
Post a Comment