Saturday, November 3, 2012

ரிஎன்ஏ கூட்டுக்குளே, ஆமிக்காரர் வீட்டுக்குள்ளே! படங்கள் இணைப்பு

கடந்த 48 மணி நேரத்தில் கிளிநொச்சி பிரதேசத்தில் கடுமழை பொழிந்துள்ளது. இம்மழையினால் வீதிகள் வீடுகள் யாவும் மழைநீரில் தாழ்ந்துள்ளதுடன் பிரதேச மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றாக பாதிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு பாதிக்கப்பட்ட மக்களுக்கான உடனடித்தேவைகளை கிளிநொச்சி இராணுவத் தலைமையகத்தினர் மேற்கொண்டு வருகின்றனர்.

பாதிக்கப்பட்ட மக்களுக்கு உலர் உணவு மற்றும் பாடசாலை மாணவர்கட்கான குடிநீர் போத்தல்கள் உட்பட்ட அடிப்படைத்தேவைகளை வீடுவீடாக செல்லும் இராணுவ அணியினர் வழங்கி வருகின்றனர்.

அத்துடன் மழையினால் முற்றாக சேதமடைந்துள்ள வீடுகளை புனரைக்கும் அவசர பணிகளையும் அவர்கள் மேற்கொண்டு வருகின்றனர்.

இவ்வாறு இராணுவத்தினர் மக்களுக்கு பணிகளை மேற்கொள்ளுகின்றபோது கிளிநொச்சியிலே மக்களின் பணத்தில் மாளிகைகளை அமைத்து வாழ்ந்துவரும் ரிஎன்ஏ காரர் எவ்வித அக்கறையுமற்றவர்களாக தமது மாளிகைகளில் இருக்கின்றனர்.

இது தொடர்பாக பொதுமகன் ஒருவர் தெரிவிக்கையில் ரிஎன்ஏ காரருக்கு கடுமழை காரணமாக குளிர்பிடித்துள்ளதாகவும் , சூடேற்றுவதற்காகவும் பின்னர் கூக்குரலிடுவதற்காகவும் புலம்பெயர் தமிழரிடம் வெளிநாட்டு குடிவகைளை உடனடியாக அனுப்பி வைக்குமாறு இலங்கைநெற் ஊடாக வேண்டுதல் விடுப்பதாக தெரிவித்தார்.

கிளிநொச்சியிலிருந்து வர்மன்











1 comments :

Anonymous ,  November 5, 2012 at 4:02 AM  

ஆபத்திக்கு உதவுபவனே மனிதன். தமிழ், தமிழீழம், தமிழ் தாயகம், என்று ஊளை இடுவதும், வாய்கிழிய கத்துவதும், போராட்டம், உண்ணாவிரதம், ஊர்வலம் என்று கள்ள கூட்டணி தலைவர்களும், புலம்பெயர் புலிப்பினாமிகளும், தமிழக கோமாளிகளும் அடுத்தடுத்து அல்லலுறும் தமிழ் மக்களுக்கு, தமிழ் மண்ணுக்கு உருப்படியாக செய்தது இதுவரைக்கும் ஒன்றுமில்லை, உண்மையில் ஆபத்திக்கு உதவும் இராணுவம் எவ்வளவோ மேல்.
கேவலம் தமிழா. கேவலம்.!
இனிமேலும் உங்கள் சுயநல வாதத்தையும், துரோக்கத்தனத்தையும் தமிழ், தமிழ் தாயகம் என்ற வார்த்தையுடன்,
எங்களுக்காக முதலைக்கண்ணீர் விட வேண்டாம்.

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com