பிரதேச சபை தலைவரின் வீட்டின் மீது தாக்குதல்
சூரியவௌ பிரதேசசபை தலைவர் சுஜித் முத்துகுமாரவின் வீட்டின் மீது இனந்தெரியாத குழுவொன்று தாக்குதல் நடத்தியுள்ளதாக பொலிஸில் முறைப்பாடென்று பதிவு செய்யப்பட்டுள்ளது. மோட்டார் சைக்கிளில் இன்று காலை வருகைதந்த குழுவினரே வீட்டின் கண்ணாடி யன்னல்களை அடித்து நொறுக்கிவிட்டு அங்கிருந்து தப்பிசென்றுள்ளனர்..
இச்சம்பவத்தின் போது எந்தவிதமான உயிர்இழப்புக்களும் ஏற்படவில்லையென்பதோடு தனது உயிருக்கு தொடர்ந்து அச்சுறுத்தல் இருப்பதாகவும் அவர் பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார்.
.
0 comments :
Post a Comment