காதலில் தோல்வியால் துப்பாக்கி சூடு ஐந்து பேர் பலி
காதலில் தோல்வியடைந்த நபர், அலுவலக ஊழியர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தியதில், ரஷ்யாவில் ஐந்து பேர் பலியாகியுள்ளனர். ரஷ்ய தலைநகர் மொஸ்கோவில், மருந்து கம்பெனியில் பணி புரியும் இளைஞர், தன்னுடன் வேலை செய்யும் பெண்ணை ஒரு தலையாக காதலித்து வந்துள்ளார். நீண்ட நாட்களாக மனதில் ஆசையை வளர்த்துக் கொண்ட அந்த நபர், சமீபத்தில், அந்த பெண்ணிடம் தன்னுடைய காதலை தெரிவித்துள்ளார். ஆனால், அந்த பெண்ணோ, இவரது காதலை அலட்சியப்படுத்தி விட்டார். இதனால், மனம் வெறுத்து போன வாலிபர், நேற்று காலை, வழக்கம் போல் அலுவலகத்துக்கு வந்தார். தன்னுடைய பிரிவில் பணியாற்றும் ஊழியர்களை நோக்கி சரமாரியாக சுட்டார். இதில், இரண்டு பெண்கள் மற்றும் மூன்று ஆண்கள் பலியாகினர்; மேலும் இரண்டு பேர் பலத்த காயமடைந்தனர். பலியானவர்களில், இவர் காதலித்த பெண்ணும் ஒருவர். அலுவலக பாதுகாவலர், இவரை மடக்கிப் பிடித்து போலீசில் ஒப்படைத்தார்.
0 comments :
Post a Comment