Wednesday, November 7, 2012

சர்வ மதக்குழுவினர் யாழ்ப்பாணத்திற்கு விஜயம்

சர்வ மதத்தலைவர்கள் மற்றும் வெளிநாட்டுபிரதிநிதிகள் அடங்கிய குழவினர் இன்றைக்கு யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்து யாழ்ப்பாணத்தின் நிலைமைகள் தொடர்பில் பல்வேறு தரப்பினருடனும் கலந்துரையாடியுள்ளனர்.யாழ்ப்பாணம் வருகை தந்த வெளிநாட்டு சர்வமதத் தலைவர்கள் மற்றும் இலங்கை சர்வமதத் தலைவர்கள்இன்று வணிகர் கழக பிரதிநிதிகள், சமாதானத்திற்கும் நல்லிணக்கத்திற்குமான குழுவும் இணைந்து யாழ்.வணிகர் கழகத்தில் சந்திப்பொன்றை மேற்கொண்டனர்.

இதன்போது போருக்கு பின்னர் யாழ்ப்பாணத்தில் மேற்கொள்ளப்படும் அபிவிருத்தி திட்டங்கள் மற்றும் சூழ்நிலை மாற்றங்கள் தொடர்பிலும் வியாபார முன்னேற்றத்தில் காணப்படும் தடைகள் தொடர்பிலும் ஆராய்ந்தனர்.

இதனைத் தொடர்ந்து யாழ்.போதனா வைத்தியசாலைக்கு விஜயம் செய்து யாழ்.போதனா வைத்தியசாலையின் நிலைமைகள் தொடர்பிலும் தற்போது நடைபெற்றுவரும் அபிவிருத்திப் பணிகள் தொடர்பிலும் ஆராய்ந்தனர்.




1 comments :

Anonymous ,  November 7, 2012 at 12:17 PM  

Religion is completely a different matter,objects which have a religious significance,the activities that are connected with the worship of them.In brief believing strongly in the existence of God or Gods.Their divine preachings only can
bring,peace,harmony,faith,sincerity
among the people and they can come out of the evil doings,which are most essential things that they can do to the public.

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com