கடற்படை உறவை மேலும் வலுப்படுத்தும் : இலங்கை - பாகிஸ்தான்
இலங்கை மற்றும் பாகிஸ்தான் இடையேயான கடற்படை உறவை வலுப்படுத்திக் கொள்ளும் நோக்கில் இலங்கை கடற்படை தளபதி வைஸ் அத்மிரால் ஜயந்த கொலம்பகே பாகிஸ்தான் சென்றடைந்துள்ளார்.
பாகிஸ்தான் கடற்படை தளபதியின் அழைப்பை ஏற்று இலங்கை கடற்படை தளபதி பாகிஸ்தானுக்கு உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டுள்ளார்.
இலங்கையின் கடற்படை தளபதியாக பதவியேற்ற பின்னர் ஜயந்த கொலம்பகே மேற்கொள்ளும் முதலாவது வெளிநாட்டு பயணம் இதுவென்பது குறிப்பிடத்தக்கது.
பாகிஸ்தான் சென்றுள்ள இலங்கை கடற்படை தளபதி கராச்சியில் அமைந்துள்ள கடற்படை நிறுவனங்களுக்கு விஜயம் செய்யவுள்ளார்.
1 comments :
We need to promote the strength of our forces,as they are the protectors of our country.
Post a Comment