Thursday, November 15, 2012

வெங்காயத்தின் மருத்துவக் குணங்கள்

“உணவே மருந்து மருந்தே உணவு” என்ற கொள்கையின் அடிப்படையே நமது இந்திய உணவுகள்தான்.

நாம் உண்ணும் உணவானது உடலுக்கு ஊட்டச்சத்தை தருவது மட்டுமின்றி, இரத்தத்தை சுத்தம் செய்து, நுண்கிருமியின் வளர்ச்சியை கட்டுப்படுத்தக் கூடியதாகவும் இருக்க வேண்டும். பாரம்பரிய உணவுகளில் சேர்க்கப்படும் பல பதார்த்தங்கள் உணவுக்கு சுவையை தருவதுடன், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்தும் ஆற்றலையும் கொண்டுள்ளன. ஒரு உணவு பதார்த்தமானது உணவாக பயன்படுவது மட்டுமின்றி, மருந்தாகவும் பயன்பட்டால் அதைப் போல் சிறந்தது வேறு எதுவுமில்லை.

உடலின் அத்தியாவசிய செயல்பாடு மற்றும் மனநலனின் பாதுகாப்பிற்கு தேவையான துத்தநாகம், கந்தகம், செலினியம் போன்றவை உடலில் நுண்கிருமிகள் தாக்குவதை தடுப்பதுடன், உடலுக்கு ஊட்டச்சத்தையும் ஏற்படுத்தி மன இறுக்கத்தை போக்குகின்றன. சருமத்திற்கு தேவையான கொழுப்பு அமிலங்கள், வைட்டமின்கள் போன்றவை சீரான முறையில் உற்பத்தியாகவும், தோலில் தங்கவும் அத்தியாவசிய புரதச்சத்துக்கள் நிறைந்த உணவு நமக்கு தேவைப்படுகிறது.

இவ்வாறு குறிப்படப்பட்ட பலவிதமான சத்துக்கள் இரத்தத்தில் குறைவதால் நமது அன்றாட உடலின் செயல்பாடு பாதிக்கப்படுவதுடன், பலவிதமான நோய்களும் உண்டாகின்றன. ஆகவே நாம் உண்ணும் உணவில் மேற்கண்ட சத்துக்கள் தவறாமல் இடம்பெற வேண்டுமா? கவலை வேண்டாம். நாம் உண்ணும் உணவில் அன்றாடம் வெங்காயத்தை சேர்த்துக் கொண்டாலே போதுமானது.

ஆண் மற்றும் பெண்களுக்கான ஹார்மோன்களின் வளர்ச்சியை தூண்டுவதுடன், இனப்பெருக்க உறுப்புகளில் நுண்ணிய குழாய்களில் ஏற்படும் இரத்த தடையையும் நீக்கும் அற்புத ஆற்றல் வாய்ந்தது வெங்காயம். சித்த மருத்துவத்தில் வளி, அழல், ஐயம் என்று சொல்லப்படும் மூன்று குற்றங்களையும் தணிக்கும் திரிதோட சமனிப் பொருளாக வெங்காயம் சிறப்பிக்கப்பட்டுள்ளது.

ஆலியம் சீபா என்ற தாவரவியல் பெயர் கொண்ட லில்லியேசியே குடும்பத்தைச் சார்ந்த வெங்காயத்தில் சிறிதாக காணப்படும் சற்று காரம் மிகுந்த சின்ன வெங்காயமே ஏராளமான மருத்துவக் குணங்களை உள்ளடக்கியுள்ளது. வெங்காயத்தில் ஏராளமான நீர்ச்சத்து அடங்கியுள்ளதாலும், குறைந்த அளவு கலோரிகளே சேமிக்கப்படுவதாலும் உடல் பருமனானவர்களும், சர்க்கரை நோயாளிகளும் வெங்காயம் மிகச் சிறந்த உணவாகும். 100கிராம் வெங்காயம் உட்கொள்ளும் பொழுது 51 கலோரிகள் மட்டுமே சத்து கிடைக்கின்றது. ஆகவே கலோரி சத்து அதிகம் நிறைந்த அசைவ உணவுகளுடன் வெங்காயமும், பூண்டும் சேர்க்கப்படுகிறது.

தேனீ மற்றும் வி­ வண்டுகள் கொட்டிய இடங்களில் சின்ன வெங்காயத்தை தடவ வி­ம் நீங்கும். ஆறாத புண்கள் ஆறவும், கட்டிகள் உடையவும் சின்ன வெங்காயத்தை தோல் நீக்கி சிறுசிறு துண்டுகளாக வெட்டி, லேசாக வதக்கி இளஞ்சூட்டில் கட்டி வரலாம். வெயில் காலங்களில் ஏற்படும் தோல் கருமை மற்றும் நீர்ச்சத்து குறைபாட்டை நீக்க வெங்காயத்தை அடிக்கடி உணவில் உட்கொள்வதுடன் வெங்காயச் சாறை வெயில் படும் இடங்களில் தடவி வரவேண்டும். இனப்பெருக்க உறுப்புகளுக்கு இரத்த ஓட்டத்தை அதிகப்படுத்துவதாலும், விரைப்புத் தன்மையை அதிகப்படுத்துவதாலும் தாம்பத்ய குறைபாடுள்ள ஆண்கள் அடிக்கடி வெங்காயத்தை உணவில் சேர்த்துக் கொள்வது நல்லது. மாதவிலக்கின் போது குறைவான இரத்தப் போக்குள்ள பெண்கள் வெங்காயத்தை மைய அரைத்து சாப்பிட இரத்தம் நன்கு வெளியேறும்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com