யாழில் வீடு புகுந்து வாள் வீச்சு நால்வர் படுகாயம்
உரும்பிராய் தெற்கு பகுதியில் நேற்று மதியம் இடம்பெற்ற கிணற்றுத் தகறாறு காரணமாக ஏற்பட்ட வாள்வெட்டில் படுகாயமடைந்த மூவர் சிகிச்சைகளுக்காக யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.இச்சம்பவம் நேற்று நண்பகல் 1 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
இதில் விநாயகமூர்த்தி (வயது 55), அவருடய மனைவி சுதர்ஷனி (வயது 47) மற்றும் இவர்களின் மகன்களான சுதர்ஷன் (வயது 27), சுகிர்தன் (வயது 21) ஆகியோர் படுகாயம் அடைந்துள்ளனர்.
அயல் வீட்டுக்காரர் ஒருவருடன் ஏற்பட்ட தகறாறு காரணமாக சுமார் 20 இற்கும் அதிகமான இளைஞர்கள் வீடு ஒன்றின் உள்ளே புகுந்து தாக்குதல் மேற்கொண்டுள்ளனர். அத்தோடு இச்சம்பவத்தில் தாக்குதல் மேற்கொண்ட ஒருவரும் மடக்கி பிடிக்கப்பட்டு பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
இச்சம்பமவ் தொடர்பில் கோப்பாய் பொலிஸாரிடம் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
0 comments :
Post a Comment