அமெரிக்க நீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக இலங்கை மேன்முறையீடு செய்யுமாம்!
ஹெஜிங் உடன்படிக்கை தொடர்பில், 60 மில்லியன் அமெரிக்க டொலரை, டொய்ச்சி வங்கிக்கு செலுத்துமாறு, அமெரிக்க நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பிற்கு எதிராக, இலங்கை மேன்முறையீடு செய்ய தீர்மானித்துள்ளது. தீர்ப்பினை வலுவற்றதாக்குவதற்காக, சட்டமா அதிபர் திணைக்களத்தினூடாக, தேவையான சட்ட நடவடிக்கைகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக, அமைச்சர் சுசில் பிரேம் ஜயந்த் தெரிவித்துள்ளார்.
எமக்கு எதிராக தீர்ப்பளித்து, 60 மில்லியன் அமெரிக்க டொலரை செலுத்துமாறு, அறிவிக்கப்பட்டுள்ளது. சட்டமா அதிபர் திணைக்களத்தினூடாக, இந்த தீர்ப்பினை வலுவற்றதாக்குமாறு கோரி, மேன்முறையீடு செய்ய, தேவையான ஒழுங்குகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. நேற்று தீர்ப்பு வழங்கியவுடன் இன்று நாம் சென்று பணத்தை வழங்க வேண்டுமென, ஒரு சிலர் கூறலாம். அவ்வாறு பணம் செலுத்த வேண்டிய தேவையில்லை. இதனை விட 4 மடங்கு அதிக தொகையை செலுத்துமாறு உத்தரவிடப்பட்டிருந்த சிட்டி வங்கிக்கு எதிராக மேன்முறையீடு செய்து நாம் வெற்றியீட்டியுள்ளோம்.
இந்த தீர்ப்பிற்கு எதிராக நாம் மேன்முறையீடு செய்து, அதில் வெற்றிபெற சகல நடவடிக்கைகளையும் மேற்கொண்டுள்ளோம். இதனால் பணத்தினை செலுத்த வேண்டிய எதுவித தேவையும் எமக்கில்லை.
குருநாகலில் இடமபெற்ற செயலமர்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே, அமைச்சர் இவவாறு கூறினார். திவிநெகும சட்டவரைவு தொடர்பில மக்களை அறிவுறுத்துவதற்காக, இது ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது. பிரதியமைச்சர் ஜயரட்ன ஹேரத் உள்ளிட்டோரும், இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.
0 comments :
Post a Comment