சுகாதாரப் பணியாளர்களைத் தாக்கி தப்பிச் சென்ற வெள்ளைவேன் மடக்கி பிடிப்பு
யாழ்.மாநகர சபைப் பணியாளர்களைத் தாக்கிவிட்டுத்தப்பிச் செல்ல முற்பட்ட ஹயஸ்வான் ஒன்று பொது மக்களால் மடக்கி பிடிக்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் நேற்றிரவு 8 மணியளவில் யாழ்.விக்டோரியா வீதியில் இடம்பெற்றுள்ளது.குறித்த வீதியில் குப்பைகளை அகற்றிக்கொண்டிருந்த மாநகர சபையின் தற்காலிக சுகாதாரப் பணியாளர்களையே இவ்வாகனம் தாக்கியுள்ளது.
மது போதையில் வாகனத்தைச் செலுத்தி வந்த சாரதியே இவர்களைத் தாக்கியுள்ளார். இதன்போது உரும்பிராயைச் சேர்ந்த தற்காலிகத் தொழிலாளி ஒருவர் படுகாயமடைந்த நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இதன்போது தப்பிச் சென்ற வாகனம் பொது மக்களால் மடக்கி பிடிக்கப்பட்டு யாழ்.பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்..
0 comments :
Post a Comment