Thursday, November 22, 2012

பிரதம நீதியரசருக்கு எதிரான பாராளுமன்ற குழுவில் அமைச்சர்களான விமல்,ராஜித இல்லை?

பிரதம நீதியரசருக்கு எதிரான பாராளுமன்றில் சமர்பிக்கப்பட்ட குற்றப்பிரேரனை தொடர்பில் விசாரணை செய்வதற்கு நியமிக்கப்பட்ட குழுவில் அமைச்சர்களான விமல் வீரவன்ச மற்றும் ராஜித சேனாரத்ன ஆகியோர் உள்ளடங்குவது தொடர்பான வழக்கை எதிர்வரும் டிசம்பர் மாதம் 31ம் திகதிக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ள மேன்முறையீட்டு நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.

பிரதம நீதியரசர் ஷிராணி பண்டாரநாயக்காவுக்கு எதிரான குற்றப்பிரேரணையை விசாரிக்கும் நாடாளுமன்ற தெரிவுக்குழுவிற்கு எதிராக மேன்முறையீட்டு நீதிமன்றில் ஆறு ரீட் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன.

அந்த மனுக்களில் நான்கு மனுக்கள் மீதான விசாரணைகள் நேற்று முன்தினம் இடம்பெற்றதுடன் அந்த மனுக்கள் தொடர்பிலான அரசியலமைப்பின் வியாக்கியானத்தை உயர் நீதிமன்றத்திடம் மேன்முறையீட்டு நீதிமன்றம் கோரியிருந்தது.

இந்நிலையில் ஏனைய இரண்டு ரீட் மனுக்கள் தொடர்பில் மேன்முறையீட்டு நீதிமன்றம் நேற்று ஆராய்ந்தது.

அந்த மனுக்களில் நாடாளுமன்ற தெரிவுக்குழுவில் அங்கம் வகிக்கும் அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர்களான ராஜித்த சேனாரத்ன மற்றும் விமல் வீரவன்ச ஆகியோருக்கு எதிராக தீர்ப்பு வழங்கிய உயர்நீதிமன்ற நீதிபதிகள் குழுமத்தில் ஷிராணி பண்டாரநாயக்காவும் உறுப்பினராக இருந்துள்ளார்.

இதனால், இவர்களிடம் ஷிராணி பண்டாரநாயக்காவுக்கு எதிரான உளப்பாங்கு இருக்கும் எனவும் இதனால், இவர்களுக்கு பிரதம நீதியரசர் ஷிராணி பண்டாரநாயக்காவுக்கு எதிரான குற்றச்சாட்டை விசாரிக்கும் நாடாளுமன்ற தெரிவுக்குழுவில் அங்கம் வகிக்க தகுதியில்லை என இரண்டு சட்டவுரைஞர்களும் மேன்முறையீட்டு நீதிமன்றில் நேற்று தங்களுடைய ஆட்சேபத்தை தெரிவித்தனர்.

நாடாளுமன்ற தெரிவுக்குழுவில் இருந்து அவ்விருவரையும் விலக்குமாறு கோரும் இந்த விலக்கல் ஆணை கோரும் மனுவை நிமல் வீரக்கொடி, சந்திரபால குமாரகே ஆகிய இருவரே தாக்கல் செய்திருந்தனர்.

மனுக்களை ஆராய்ந்த நீதிமன்றம், நாடாளுமன்றம், தெரிவுக்குழுவில் இருந்து உறுப்பினர்களை விலக்குமாறு கோரியுள்ள விலக்கல் ஆணை கோரும் மனுக்களானவை மூன்றாம் தரப்பு முறையீடாகும்.

அவ்வாறான மனுவை பாதிக்கப்பட்டவரே செய்ய வேண்டும். அத்துடன் தெரிவுக்குழு அங்கத்தவர்களுக்கு எதிரான உளப்பாங்கு இருக்கும் எனவும் அவரே முறையிட வேண்டுமெனவும் மனுதாரர்களின் சட்டவுரைஞர்களுக்கு அறிவுறுத்தியது.

இது தொடர்பில் மேலும் அறிவுறுத்துவதற்கு முறைப்பாட்டாளர்களின் வழக்குறைஞர்கள் கால அவகாசம் கேட்டத்தை அடுத்து மனுக்கள் மீதான மேலதிக விசாரணைகளை டிசெம்பர் மாதம் 31ஆம் திகதிக்கு மேன்முறையீட்டு நீதிமனறம் ஒத்தவைத்தது

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com