தெரிவுக்குழு விவகாரம் சட்டமா அதிபரை நீதிமன்றில் ஆஜராக உத்தரவு
நாடாளுமன்ற தெரிவுக்குழுவிற்கு எதிராக மேன்முறையீட்டு நீதிமன்றதில் தாக்கல் செய்யப்பட்டு அரசியலமைப்பின் வியாக்கியானத்திற்காக உயர் நீதிமன்றத்திற்கு அனுப்பப்பட்டுள்ள ரீட் மனுக்கள் விசாரணை தொடர்பான விசாரணைகளுக்காக சட்டமா அதிபரை நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு உயர்நீதிமன்றம் பணித்துள்ளது.
ரீட் மனுக்கள் விசாரணை எடுத்துக்கொள்ளப்பட்ட போதே உயர்நீதிமன்றம் மேற்கண்டவாறு பணித்துள்ளது.
இதேவேளை பிரதம நீதியரசர் சிராணி பண்டாரநாயக்கவுக்கு எதிரான விசாரணைகளுக்காக நியமிக்கப்பட்ட நாடாளுமன்ற தெரிவுக்குழுவை இரத்துசெய்யுமாறு கோரியே மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் 6 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன என்பதும் குறிப்பிடத்தக்கது.
0 comments :
Post a Comment