பிரிட்டன் இளவரசர் மீது குதிரைச் சாணம் வீச முயன்றவர் கைது
நியூசலாந்தில் பிரிட்டன் இளவரசர் சார்ல்ஸ் மற்றும் அவரது மனைவி கமீலா மீது பொது நபர் ஒருவர் குதிரை சாணத்தை வீச முயன்றது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பிரிட்டன் இளவரசர் சார்ல்ஸ்; இவரது மனைவி கமீலாவும் சமீபத்தில் நியூசிலாந்துக்கு பயணம் மேற்கொண்டனர்.
அங்கு ஆக்லாந்து பகுதியில் பல்வேறு நிகழ்ச்சியில் இவர்கள் கலந்து கொண்டிருந்த போது பொதுமக்களிடையே நின்றிருந்த நபர், இளவரசர் சார்ல்ஸ் மீது குதிரை சாணத்தை வீச முயன்றுள்ளார்.
இதனையடுத்து அந்த நபர் கைது செய்யப்பட்டார். இவரது பெயர் சாம் பிராக்கனோவ்(வயது 74) என்றும், மன்னராட்சிக்கு எதிரானவர் என்றும் ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இளவரசர் சார்ல்ஸ் கடந்த 1994ஆம் ஆண்டு நியூசிலாந்து வந்த போதும், அவர் மீது கழிவு நீரை தெளிக்க பிராக்கனோவ் முயற்சி செய்துள்ளார்; என்பதும் மேலதிக விசாணைகளில் தெரியவந்துள்ளது.
PM
0 comments :
Post a Comment