அடையாள அட்டை பெறுவதிலுள்ள சிக்கலை தீர்க்க தொலைபேசி இலக்கம் அறிமுகம்
கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப்பரீட்சையில் தோற்றவுள்ள பரீட்சார்த்திகள் தேசிய அடையாள அட்டைகளைப் பெற்றுக் கொள்வதில் எதிர்நோக்கியுள்ள பிரச்சினைகள் குறித்து முறையிடுவதற்கு விசேட தொலைபேசி இலக்கம் ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக ஆட்பதிவுத் திணைக்களம் அறிவித்துள்ளது.
2012ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் நடைபெறவுள்ள க.பொ.த சாதாரணதரப் பரீட்சையில் தோற்றவுள்ள பரீட்சார்த்திகள் கடந்த அக்டோபர் மாதத்துடன் 16 வயது பூர்த்தியடைந்த அனைவருக்கும் தேசிய அடையாள அட்டைகளை விநியோகிப்பதற்கான நடவடிக்கைகளை ஆட்பதிவுத் திணைக்களம் மேற்கொண்டு வருகின்றது.
இதற்கு தேவையான ஒத்துழைப்புக்களை கல்வியமைச்சும் மேற்கொண்டு வருகின்றது.
இந்நிலையில் , இந்த அடையாள அட்டைகளைப் பெற்றுக் கொள்வதில் ஏதேனும் பிரச்சினை ஏற்பட்டால் அது தொடர்பாக பரீட்சைக்கு முன்னதாக பாடசாலை அதிபர்கள் மற்றும் மாணவர்கள் ஆட்பதிவுத் திணைக்களத்திற்கு 0112583122 என்ற தொலைபேசி இலக்கத்தினூடாக அறியத்தரமுடியும் என ஆட்பதிவுத் திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் ஜகத் விஜேவீர மேலும் தெரிவித்தார்.
0 comments :
Post a Comment