Tuesday, November 13, 2012

நாட்டில் மகிழ்ச்சி,அமைதி சமாதானம் நிலவட்டும் ஜனாதிபதி தீபாவளி வாழ்த்து செய்தி

எல்லோர் மத்தியிலும் மகிழ்ச்சியைக் கொண்டுவந்து அமைதி சமாதானம் குறித்த எதிர்பார்ப்புகளை நிறைவேற்றி வைக்கட்டும். இலங்கை வாழ் இந்துக்களுக்கு எனது மகிழ்ச்சியும் அமைதியும் நிறைந்த தீபாவளி வாழ்த்துக்கள் என ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ வெளியிட்டுள்ள தீபாவளித்திருநாள் வாழ்த்து செய்தியில் தெரிவித்துள்ளார்.

தீபாவளியை முன்னிட்டு அவர் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

தீபாவளித் திருநாள் இந்துப் பாரம்பரியத்தில் ஆன்மீக சுபீட்சத்தின் ஒரு வெளிப்பாடு என்ற வகையில் விசேட முக்கியத்துவம் பெறுகிறது.

தீயவற்றை நீக்கி- நன்மையையும்- அறியாமையை நீக்கி அறிவுடமையையும்- இருளை நீக்கி ஒளியையும் வெற்றிகொள்வதை அது குறித்து நிற்கின்றது.

இந்து சமயத்தின் உயர்ந்த ஆன்மீக பெறுமானங்கள்- பாரம்பரியங்களுக்கேற்ப சிறந்த வாழ்க்கைக்காக மக்கள் மேற்கொண்ட ஒரு உறுதியான போராட்டத்தின் முன்னேற்றத்தை அது அடையாளப்படுத்தி நிற்கின்றது.

இலங்கை வாழ் இந்துக்கள் இன்று இவ்விசேட பண்டிகையைக் கொண்டாடுவதற்காக உலகெங்கிலுமுள்ள தமது சகோதர இந்துக்களுடன் இணைந்து கொள்கின்றனர்.

இது சமூகங்களுக்கிடையே புரிந்துணர்வுக்கான மிகுந்த நம்பிக்கையை கொண்டு வருவதோடு மக்களை பிரித்துவைக்கும் எல்லா வேறுபாடுகளையும் களைந்து அவர்கள் மத்தியில் சுபீட்சத்தை ஏற்படுத்துகிறது.

இத்தீபத்திருநாள் கொண்டாட்டம் இந்து சமயப் போதனைகளை போற்றிப் பின்பற்றும் எல்லோர் மத்தியிலும் மகிழ்ச்சியைக் கொண்டுவந்து அமைதி சமாதானம் குறித்த எதிர்பார்ப்புகளை நிறைவேற்றி வைக்கட்டும். இலங்கை வாழ் இந்துக்களுக்கு எனது மகிழ்ச்சியும் அமைதியும் நிறைந்த தீபாவளி வாழ்த்துக்கள் என்றுள்ளது

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com