Saturday, November 10, 2012

இந்தியாவில் தான் முறையாகத் திருமணம் செய்யும் வாய்ப்பு - கனடிய பிரதமரின் மனைவி

இந்தியாவின் பெங்களூரில் உள்ள சிறீ சோமேஸ்வரர் கோவிலிக்குச் கனடியப் பிரதமரும், அவரது மனைவியும் சென்று வழிபாட்டில் ஈடுபட்ட சம்பவத்தை கனடிய ஊடகங்கள் நகைச்சுவையாக வெளியிட்டுள்ளன வெறும் பாதங்களுடன் கோயிலிற்கு சென்று இந்து சமய அனுஸ்டானங்களின் படி அவர்கள் வணங்கியதைக் குறிப்பிட்டு எழுதியுள்ள மேற்படி ஊடகங்கள் திருமதி ஹாப்பர் இச் சம்பவத்தின் போது பிரமருடன் பகிர்ந்த ஒரு நகைச்சுவையையும் குறிப்பிட்டுள்ளன.

தலைமைக்குருவால் வாசலில் இருந்து அழைத்துச் செல்லப்பட்ட பிரதமர் தம்பதிகள் கோவில் பிரகாரத்தினுள் நுழையும் போது, பிரதமருக்கு மைசூர் மல்லிகை மொட்டுக்களாலான மாலையினை அணிவித்து சால்வையும் போர்த்தியதோடு,

இன்னொரு மைசூர் மல்லிகை மொட்டுக்களிலான மாலையையும், சால்வையும் தாம்பாளத்தில் வைத்து அதனை பிரதமரை அவரது மனைவிக்கு அணியுமாறு வேண்டினார்.

அப்படி பிரதமர் மாலையை தனக்குச் சூடும் போதே திருமதி லோறீன் ஹாப்பர் அப்பாடா நாங்கள் இப்போது தான் முறையாகத் திருமணம் செய்துள்ளோம் எனக் குறிப்பிட்டுள்ளார்.

அதன்பிறகு உள்ளே நடந்த பூசையின் போது குங்குமத்தை எடுத்து தனது நெற்றியில் பொட்டிட்ட திருமதி லோறீன் ஹாப்பர் அந்தப் பொட்டுடனே கோவிலிருந்து புறப்படும் போதும் சென்றிருக்கிறார்.

தலைமைக்குரு 'தீர்க்கசுமான் பகவா' என்று சமஸ்கிருதத்தில் கூறியதன் அர்த்தம் 'நீங்கள் இருவரும் நீடுழி வாழ்க' என்பதை மொழிபெயர்த்துப் போடுமளவிற்கு கனடிய தேசிய நீரோட்ட ஊடகங்கள் முன்னேறியுள்ளன.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com