ஆசனிக் கலப்பு பொருட்கள் இலங்கையில் தடை செய்யப்படவுள்ளன?
இலங்கையின் விற்பனை செய்யப்படும் மருந்துப் பொருட்களிலும் விவசாயத்துக்கு பயன்படுத்தப்படும் பசளைகளிலும் ஆசனிக் என்ற இராசயனப் பொருள் உள்ளதா என்பது குறித்து ஆராய்ச்சிகள் மேற் கொள்ளப்படவுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.இவ்வாறு ஆசனிக் கலந்துள்ள மருந்துப் பொருட்கள் மற்றும் விவசாயப் பசளைகளை நாட்டில் முற்றாகத் தடைசெய்வது குறித்தும் கலந்துரையாடப்படுவதாக சுகாதார அமைச்சின் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்
ஆசனிக் என்பது ஒரு இராசயன மூலகமாகும். எனினும் அது நச்சுப் பொருளாகவே கருதப்படுகிறது. இந்தநிலையில் இலங்கையில் சிறுநீரக நோய்கள் பரவுவதற்கு இந்த மூலகமும் காரணம் என்று தெரியவந்துள்ளது.
இதனையடுத்தே இலங்கையிருந்து ஆசனிக் கலப்பு பொருட்களை தடைசெய்யும் நடவடிக்கை மேற்கொள்ளப்படுகின்றன என்பதும் குறிப்பிடத்தக்கது
0 comments :
Post a Comment