புதிய ஏவுகணை தயாரிக்கிறது வடகொரியா -கோரிய தீபகற்பதில் போர் மூளும் அபாயம்
வடகொரியா நீண்ட தூரம் பாய்ந்து சென்று தாக்க கூடிய ஏவுகணையை தயாரித்து வருவதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ள நிலையில் , தென் கொரியா- வடகொரியா இடையே போர் மூளும் அபாயம் ஏற்பட்டுள்ளது.வடகொரியா நீண்ட தூரம் பாய்ந்து சென்று தாக்க கூடிய ஏவுகணையை தயாரித்து வருவதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. ஆனால் இத்தகவலை வடகொரியா மறுத்துள்ளது.
இந்நிலையில் அமெரிக்கா தனது செயற்கைகோள் மூலம், வடகொரியா தலைநகர் பியாங்யாங்கில் உள்ள ராணுவ தொழிற்சாலையில் ஏவுகணை உதிரிபாகங்கள் தயாரிப்பதையும், தொங்சாங்கில் ஏவுகணை ஏவுவதற்கான கூண்டு அமைப்பதையும் கண்டுபிடித்துள்ளது.
இந்த தகவலை அமெரிக்கா தனது நட்பு நாடுகளான ஜப்பான் மற்றும் தென் கொரியாவிடம் தெரிவித்து உஷார்படுத்தியுள்ளது. ஏவுகணை தயாரிப்பதன் மூலம் வடகொரியா தாக்குதல் நடத்த கூடும் என தென் கொரியா கருதுகிறது.
எனவே வடகொரியா எல்லையில் உள்ள யான்பியாங் தீவில் தென் கொரியா போர் ஒத்திகைகளை நடத்தி வருகிறது. அதற்காக ஆயுதம் தாங்கிய போர் கப்பல்கள் நிறுத்தப்பட்டுள்ளன.
ரோந்து கப்பல்களும் அங்கு தீவிரமாக கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளன. அதனால் வடகொரியா மற்றும் தென் கொரியாவுக்கு இடையே போர்பதட்டம் நிலவுகிறது.
0 comments :
Post a Comment