சிறையில் மறைத்து வைத்திருந்த கைபேசிகளை விழுங்கிய புலிச் சந்தேக நபருக்கு சத்திரசிகிச்சை
அநுராதபுரம் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த புலிச் சந்தேகநபர் ஒருவர் சட்டவிரோதமாக வைத்திருந்த இரண்டு கையடக்க தொலைபேசிகளை விழுங்கியுள்ள நிலையில் சத்திசிகிச்சைக்கு உட்படுத்தப்படவுள்ளார். இச்சம்பவம் அநுராதபுரம் சிறைச்சாலையில் இடம்பெற்றுள்ளது. இச் சத்திரசிகிச்சை நீதிமன்றம் உத்தரவுக்கு அமையவே மேற்கொள்ளப்படவுள்ளது.
அநுராதபுரம் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த வவுனியா பிரதேசத்தைச் சேர்ந்த புலிச் சந்தேகநபர் ஒருவரை வவுனியா நீதிமன்றத்தில் இடம்பெற்ற வழக்கொன்றுக்காக அழைத்துச்சென்று மீண்டும் அநுராதபுரத்துக்கு அழைத்து வந்தபோதே மேற்படி கையடக்கத் தொலைபேசிகள் இரண்டையும் அவர் விழுங்கியுள்ளார் என தெரிவிக்கப்படுகின்றது.
தீடிரென்று வயிற்றுக்குள்ளிருந்த கையடக்கத் தொலைபேசிகளில் ஒன்று அலறியபோது அவரது வயிற்றிலும் தொண்டைப் பகுதியிலும் பாரிய வேதனை ஏற்பட்டுள்ளது.
இதனையடுத்து அநுராதபுரம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு சத்திரசிகிச்சை மேற்கொள்ள நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
0 comments :
Post a Comment