Saturday, November 24, 2012

ஆபாசப்படநடிகை கொலை பிரபல கால்பந்தாட்ட வீரர் குடும்பத்துடன் கைது

பிரேசில் நாட்டுக் கால்பந்து வீரர் ப்ரூனோ சௌசா, அவரது மனைவி உள்ளிட்ட 6 பேரை ஆபாச படநடிகையை ஒருவரை கொலை செய்ததற்காக பிரேசில் நாட்டு பொலிசார் கைது செய்துள்ளனர்.பிரேசில் நாட்டின் பிளமிங்கோ கால்பந்து கிளப் அணியில் கோல்கீப்பராக இருப்பவர் ப்ரூனோ. வளரும் வீரரான இவர் அந்த நாட்டில் பிரபலமானவர்.

சமீபத்தில்தான் இவர் இத்தாலியின் ஏசி மிலன் அணிக்கு பெரும் தொகைக்கு ஒப்பந்தமாகியிருந்தார். இந்தநிலையில்தான் காதலியைக் கொடூரமாகக் கொலை செய்த வழக்கில் சிக்கிக் கைதாகியுள்ளார்.

25 வயதான ப்ரூனோவின் காதலிதான் எலீசா சமுடியோ. ஆபாசப் பட நடிகையான இவர், பல ஆண்களுடன் தொடர்புப்படுத்தப்பட்டவர். எலீசாவுக்கும், ப்ரூனோவுக்கும் இடையே கடந்த ஆண்டு நட்பு ஏற்பட்டது.

அந்த முதல் சந்திப்பிலேயே இருவரும் உறவு வரைக்கும் போய் விட்டனர். அதில் கர்ப்பமடைந்தார் எலீசா. ஆனால் அந்தக் குழந்தையை விரும்பாத ப்ரூனோ கருக்கலைப்புக்கு வற்புறுத்தி வந்தார். ஆனால் அதற்கு எலீசா சம்மதிக்கவில்லை.

இதனையடுத்து ப்ருனோ தொடர்ந்து தன்னை தொல்லைப்படுத்தி வருவதாக கடந்த ஒக்டோபர் மாதம் எலிசா பொலிசில் புகார் கொடுத்தார். தன்னை அடித்து துன்புறுத்துவதாகவும், கருக் கலைப்பு மருந்துகளை வலுக்கட்டாயப்படுத்தி வாயில் ஊற்றியதாகவும் அவர் புகாரில் கூறியிருந்தார்.

இந்நிலையில் 4 மாதங்களுக்கு முன்பு எலீசாவுக்குக் குழந்தை பிறந்தது. மேலும் இந்தக் குழந்தைக்குத் தந்தை ப்ரூனோதான் என்பதை நிரூபிக்கும் முயற்சிகளிலும் எலீசா தீவிரம் காட்டினார்.

இதனால் கோபமடைந்த ப்ரூனோ, முன்னாள் உளவுப் பொலிஸ் அதிகாரியான லூயிஸ் அபரெசிடோ சான்டோஸ் என்பவரை அணுகி, எலீசாவைக் கொலை செய்ய வேண்டும் என்று கூறியுள்ளார்.

இதையடுத்து ரியோடி ஜெனீரோ நகரிலிருந்து எலீசாவைக் கடத்திய லூயிஸ், பெலோ ஹாரிசான்டே என்ற நகருக்குக் கொண்டு சென்று அங்கு ஒரு வீட்டில் அடைத்து வைத்து சித்திரவதை செய்துள்ளார்.

அவரது சத்தம் வெளியில் கேட்கக் கூடாது என்பதற்காக மியூசிக் சிஸ்டத்தை எந்த நேரமும் சத்தத்துடன் ஒலிக்க வைத்துள்ளார். பல்வேறு வகையில் எலீசாவைக் கொடுமைப்படுத்தியுள்ளார் லூயிஸ்.

அதன் பின்னர் எலீசாவைக் கொலை செய்தார் லூயிஸ். பின்னர் உடலை துண்டு துண்டாக வெட்டியுள்ளார்.

அசில் சில உடல் பாகங்களை தனது வீட்டில் வளர்த்து வந்த நாய்க்குப் போட்டுள்ளார். மீத உடல் பாகங்களை வீட்டில் புதைத்து அதை கான்க்ரீட் வைத்து பூசி விட்டார்.

இந்தக் குற்றச் செயலைத் திட்டமிட்டவர் ப்ரூனோ என்று பொலிசார் குற்றம் சாட்டியுள்ளனர். இந்தக் கொடூரக்கொலைக்கு ப்ரூனோவின் மனைவி டேயனும் உடந்தையாக இருந்துள்ளார்.

இதையடுத்து ப்ரூனோ, மனைவி டேயன், லூயிஸ் உட்பட மொத்தம் 7 பேரை பொலிசார் கைது செய்துள்ளனர்.

எலீசா கொலை செய்யப்பட்டபோது அங்கு ப்ரூனோவும் இருந்துள்ளார். தனது காதலி துடிக்கத் துடிக்கச் சாவதை அவர் பார்த்து ரசித்துள்ளார்.

எலீசாவின் கழுத்தை ப்ரூனோதான் நெரித்துக் கொன்றார் என்றும் பொலிசார் கூறியுள்ளனர். அவருக்கு டிஎன்ஏ சோதனை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com