வெலிக்கடை காட்சிகளை பொலிஸாருக்கு வழங்குக- ஊடகங்களுக்கு நீதிவான் உத்தரவு
வெலிக்கடை சிறைச்சாலையில் இடம்பெற்ற கலவரத்தின் போது எடுக்கப்பட்ட வீடியோ காட்சிகளின் செம்மைப்படுத்தப்படாத பிரதிகளை குற்றப்புலனாய்வுப் பொலிஸாரிடம் ஒப்படைக்கும்படி கொழும்பு நீதவான்; ஊடக நிறுவனங்களை பணித்துள்ளார்.
கடந்த 9ஆம் திகதி வெள்ளிக்கிழமை வெலிக்கடை சிறையில் கைதிகளுக்கும் பாதுகாப்பு தரப்பினருக்கும் இடையில் கடும் கலவரம் இடம்பெற்றது.
இதன்போது அச்சு மற்றும் இலத்திரனியல் ஊடகங்கள் சம்பவத்தை நேரடியாக பதிவு செய்திருந்தன.
இந்நிலையில் பொரளை பொலிஸாரால் கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தில் இன்று செய்த விண்ணப்பத்தை கருத்திற்கொண்டு கொழும்பு மேலதிக நீதவான் இந்த கட்டளையைப் பிறப்பித்தார்.
இச்சமயம், சிறையிலிருந்து தப்பியதாகக் கூறப்படும் ஆறுபேரை பொலிஸார் நீதிமன்றில் ஆஜர்செய்தனர். அவர்களை எதிர்வரும் 21ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்ட நீதவான், இந்த வழக்கு விசாரணையை எதிர்வரும் 28ஆம் திகதிக்கு ஒத்திவைத்தார்.
0 comments :
Post a Comment