இஸ்ரேல் - பாலஸ்தீனம் சண்டை, நேற்று நள்ளிரவு முதல் முடிவுக்கு வந்தது.
இஸ்ரேல் பாலஸ்தீனத்திற்கு இடையில் கடந்த 8 நாட்களாக நடைபெற்று வந்த போரானது நேற்று நள்ளிரவு முதல் தற்காலிகமாக முடிவுக்கு வந்துள்ளதாக தெரியவருகின்றது.
இஸ்ரேல் - பாலஸ்தீனம் பிரச்னையில் சுமுக தீர்வு ஏற்படுத்த அமெரிக்க வெளிவிவகாரத்துறை அமைச்சர் ஹிலாரி கிளிண்டன் இஸ்ரேல் சென்றார்.
இதற்கிடையே சண்டையை முடிவுக்கு கொண்டு வருவது ஹமாஸ் அமைப்பினரிடம் தான் உள்ளது. அவர்கள் அமைதியை விரும்புகின்றனரா அல்லது சண்டையை விரும்புகின்றனரா என்பதை அவர்கள் தான் முடிவு செய்ய வேண்டும் என இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு கூறியிருந்தார்.
அமைதியை விரும்புவதாக ஹமாஸ் அமைப்பினர் தெரிவித்துள்ளனர். துருக்கி கேட்டுக் கொண்டதற்கிணங்க, இஸ்ரேலும் காசா நகரத்தின் மீது தாக்குதல் நடத்துவதை நிறுத்த ஒப்புக்கொண்டது.
இதையடுத்து நேற்று நள்ளிரவு முதல் இஸ்ரேல் - பாலஸ்தீனம் சண்டை தற்காலிகமாக முடிவுக்கு வந்தது.
0 comments :
Post a Comment