மன்னாரில் அனர்த்த எச்சரிக்கைக்கு ஒலிபெருக்கி
இயற்கை அனர்த்தங்களின் போது முன்னெச்சரிக்கைகளை வழங்குவதற்கான பயிற்சி மற்றும் மன்னார் மாவட்ட இயற்கை அனர்த்தங்களை இனங்கண்டு, வடிவமைப்பதற்காக மன்னாரில் இன்று நடத்தப்பட்ட கூட்டத்தின் போது, இயற்கை அனர்த்தங்களின்போது முன்னெச்சரிக்கைகளை விடுப்பதற்கான ஒலிபெருக்கி சாதனங்கள் வழங்கப்பட்டன.
மன்னார் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற கூட்டத்தில், மாவட்ட அரசாங்க அதிபர் சரத் ரவீந்திர, இதனை வழங்கி வைத்தார். இந்த ஒலிபெருக்கிச் சாதனங்கள், அனர்த்தங்களை முன்னறிவிப்பு செய்வதற்கான ஒலிபெருக்கி சாதனங்கள், மாவட்ட பொலிஸ் நிலையங்களுக்கு வழங்கப்பட்டன. பாதுகாப்பு உயர் அதிகாரிகளும், மாவட்ட திணைக்கள தலைவர்களும், இதில் கலந்து கொண்டனர்.
0 comments :
Post a Comment