Tuesday, November 27, 2012

யாழில் வீடு புகுந்து பெண்ணை கடத்த முற்பட்ட நபரை பிரதேசவாசிகள் மடக்கிப் பிடித்தனர்.

வீட்டுக்குள் புகுந்து பெண்ணொருவரைக் கடத்த முயற்சித்த இனந்தெரியாதோரை பிரதேசவாசிகள் மடக்கிப் பிடித்து பொலிஸாரிடம் ஒப்படைத்த சம்பவமொன்று யாழ்ப்பாணம் பல்கலைக்கழக பிரதேசத்தில் நேற்று இரவு 9 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

வான் ஒன்றில் வந்த சந்தேகநபர்கள் இருவர் வீட்டிலிருந்த பெண்ணொருவரை பலவந்தமாக கடத்திச் செல்ல முற்பட்டுள்ளனர்.

இதனால் குறித்த பெண்ணும் அவரது தாயாரும் கூச்சலிட்டதில் அங்கு கூடிய பிரதேசவாசிகள் சந்தேகநபர்களை மடக்கிப் பிடிக்க முயன்றுள்ளனர்.

இதன்போது ஒருவர் மாத்திரம் அகப்பட்டுக்கொண்ட நிலையில் ஏனைய சந்தேகநபர் அப்பகுதியிலிருந்து தப்பிச் சென்றுள்ளார்.

மடக்கிப் பிடிக்கப்பட்ட சந்தேகநபர் கோப்பாய் பொலிஸில் ஒப்படைக்கப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

1 comments :

Anonymous ,  November 27, 2012 at 11:23 AM  

It's a unpleasant surprise how the peace order dicipline and traditions vanished away from the conservative minded Jaffna peninsula and conqured by the criminal gangs.Violent shaking
movements for the poor female society
The real protection is in the hands of justice.

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com