Wednesday, November 7, 2012

பாபுல் ஹஸன் மத்திய கல்லூரியின் கலைமலர் சஞ்சிகை வெளியீட்டு விழா

வரகாபொல பாபுல் ஹஸன் மத்திய கல்லூரியின் கலைமலர் சஞ்சிகை வெளியீட்டு விழா, கல்லூரி அதிபர் எம்.ஜே.எம். காஸிம் தலைமையில் இடம்பெற்றது. இவ் விழாவில், பிரதம அதிதியாக கல்லூரியின் பழைய மாணவர் சங்க கொழும்பு கிளையின் தலைவர் தமிழ்த்தென்றல் அலி அக்பர் கலந்து கொண்டார். 1944 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட இக்கல்லூரியில் 1950 ஆம் ஆண்டு முதல் வெளிவரும் இச்சஞ்சிகை ஆரம்பத்தில் கையெழுத்து பிரதியாக வெளிவந்தது. தற்போது இது அச்சுப்பிரதியாக வெளிவருகின்றது. ~புணல்| சிறப்பு மலராக சஞ்சிகை இம்முறை வெளிவந்துள்ளது. இதன் முதல் பிரதியை சிரேஷ்ட அமைச்சர் அதாஉத செனவிரட்னவின் இணைப்பு செயலாளரும், இலங்கை-லிபிய நட்புறவு சங்கத்தின் செயலாளருமான எம்.எச்.எம். அன்ஸார், பெற்றுக்கொண்டார். ஆசிரியை திருமதி. எம்.எச். ஆதிகா ஹஸன், நூல் அறிமுக உரையை நிகழ்த்தினார். தாஜூல் உலூம் கலைவாதி கலீல் நூல் ஆய்வினை நிகழ்த்தினார். கவிஞர் கிண்ணியா அமீர் அலி, கவி வாழ்த்துப்பாடினார். பிரதி அதிபர் எம்.எம். ரபகா கமால்தீன் உட்பட பலர், உரையாற்றினர். இதன் போது பாடசாலை மாணவர்களின் கலை நிகழ்ச்சிகளும், இடம்பெற்றன.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com