இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இலங்கையை தோற்கடித்தது நியூசிலாந்.
நியூசிலாந்து - இலங்கை அணிகளுக்கு இடையில் கொழும்பில் நடைபெற்று வந்த இரண்டாவது டெஸ்ட் போட்டியில் நியூசிலாந்து அணி 167 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. இப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய நியூசிலாந்து அணி தனது முதல் இன்னிங்ஸில் 412 ஓட்டங்களை எடுத்தது. வில்லியம்சன் 135 ஓட்டங்களையும் டெய்லர் 142 ஓட்டங்களையும் எடுத்தனர். பதிலுக்கு களமிறங்கிய இலங்கை அணி 244 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுக்களையும் இழந்தது.
இதையடுத்து நியூசிலாந்து அணி இரண்டாவது இன்னிங்ஸில் 194 ரன்களுக்கு 9 விக்கெட்டுக்களை இழந்திருந்த போது ஆட்டத்தை டிக்ளே செய்தது. இலங்கை அணிக்கு 363 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.
எனினும் ஆரம்ப துடுப்பாட்ட வீரர்கள் அனைவரும் வந்த வேகத்தில் ஆட்டமிழந்ததை தொடர்ந்து இலங்கை வெற்றி பெறும் வாய்ப்பு இல்லாது போனது. ஆனால் எப்படியும் போட்டியை சமநிலைப்படுத்திவிடலாம் என கடுமையாக முயற்சித்த இலங்கை அணி இன்றைய இறுதி நாள் போட்டியில் 85 ஓவர்கள் வரை விளையாடிவிட்டது.
எனினும் நியூசிலாந்தின் சௌதேஇ பவுல்ட் ஆகியோரின் திறமையான பந்துவீச்சினால் தாக்குப்பிடிகக் முடியாது போனது. 195 ஓட்டங்களை எடுத்திருந்த போது சகல விக்கெட்டுக்களையும் இழந்து இலங்கை தோல்வியை தழுவியது. ஆஞ்சலோ மத்திவ்ஸ் மாத்திரம் 84 ஓட்டங்களை எடுத்தார்.
இதையடுத்து 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரை 1-1 என நியூசிலாந்து சமைநிலைப்படுத்தியது. 14 வருடங்களின் பின்னர் இலங்கையில் டெஸ்ட் போட்டியொன்றை நியூசிலாந்து வென்றிருப்பது குறிப்பிடத்தக்கது.
0 comments :
Post a Comment