பிரதம நீதியரசரை அவமதித்த நாடாளுமன்றப் பொலிஸார்
பிரதமர் நீதியசர் ஷிராணிபண்டார நாயக்க எவ்விதமான பாதுகாப்பும் இன்றி நாடாளுமன்றத்திற்கு வருகைதந்தபோது நாடாளுமன்ற வளாகத்தின் நுழைவாயில் கடமையில் இருந்த பொலிஸார் அவருக்கு எவ்விதமான மரியாதையும் செலுத்தவில்லை. என்று குற்றஞ்சாட்டப்படுகின்றது.
பிரதம நீதியரசர் மீதான பாராளுமன்ற குழவின் விசாரணைகளுக்காக பிரதம நீதியரசர் நேற்று பாராளுமன்றில் ஆஜரானார். இதன்போது அவர் எந்தவிதமான பாதுகாப்புக்களும் இன்றி வருகைதந்துள்ளார்.
ஆனால் பிரதம நீதியரசர் உள்ளிட்ட நீதிபதிகள்,நீதவான்கள் செல்கையில் கடமையில் இருக்கும் பொலிஸார் அவர்களுக்கு மரியாதை செலுத்துவது குறிப்பிடத்தக்கதாகும்.
0 comments :
Post a Comment