நகரசபை தலைவருக்கு அடிக்க முயன்ற உபதலைவர் த.தே.கூட்டமைப்பின் இன்னொரு லீலை அம்பலம்!!!
வல்வெட்டித்துறை நகர சபைத் தலைவர் என்.அனந்தராஜை தாக்க முயன்றார் என வல்வெட்டித்துறை நகர சபை உபதலைவருக்கு எதிராக வல்வெட்டித்தறைப் பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வசமும் ஆட்சியிலும் உள்ள இந்நகர சபையில் தலைவருக்கு அடிக்கமுன்றதாகவே உப தலைவர் க.சதீஸ் இற்கு எதிராக முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
இம்முறைப்பாடு கடந்த சனிக்கிழமை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இது தொடர்பில் பொலிஸாரும் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
கடந்த 31ம் திகதி நகர சபையில் நடைபெற்ற கூட்டத்தின்போதே இத்தாக்குதல் முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது.
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வசம் உள்ள இந்நகர சபையில் தலைவர் என்.அனந்தராஜ் கடுமையான ஊழல் மோசடிகளும், லஞ்சம் வாங்கும் செயற்பாடுகளை மேற்கொண்டு வருகின்றார்.
இவருக்கு எதிராக தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் எந்தவிதமான நடவடிக்கையையும் எடுக்க முடியாது திணறிவருவதோடு இங்கு ஆளும் கட்சியினரே அடிக்கடி மோதலில் ஈடுபட்டு வருகின்றனர்.
இவர்களிடம் தனி நாடு கொடுத்தால் என்னவாகும்! மக்கள் கடும் விசனமடைந்துள்ளனர்.
1 comments :
Tamils present situation is something frying pan to fire
Post a Comment