யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த பெண்ணொருவர் கொழும்பில் சடலமாக மீட்பு!
யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த பெண்ணொருவர் கொழும்பிலுள்ள லொட்ஜ் ஒன்றில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். யாழ். புலோலியைச் சேர்ந்த சண்முகவேல் அம்பிகாவதி என்ற 67 வயதான பெண்ணே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவராவார்.
கொழும்பு-13 புதுச்செட்டித் தெருவிலுள்ள லொட்ஜ் ஒன்றின் குளியறையிலிருந்தே இன்று (02) இவரது சடலம் மீட்கப்பட்டதாகக் கொட்டாஞ்சேனை பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த மரணம் தொடர்பில் மேலதிக விசாரணைகளைப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
0 comments :
Post a Comment