தாயாரின் கவனயீனம் பிள்ளையின் உயிரைப் பறித்தது
விளையாடுவதற்கு தாயார் கொடுத்த மாபிளை விழுங்கிய குழந்தை மூச்சுத் திணறி பரிதாபகரமாக உயிரிழந்துள்ளது.இச்சம்பவம் நேற்று திங்கட்கிமை டச்சு வீதி அளவெட்டி தெற்கு பகுதியில்; இடம்பெற்றுள்ளது. குறித்த பிரதேசத்தை சேர்ந்த ஒன்றரை வயதான குலேந்திரன் அருள் என்ற குழந்தையே இச்சம்பவத்தில் உயிரிழந்துள்ளது.
விளையாடுவதற்கு தாயார் மாபிளை கொடுத்துள்ளார்.மாபிளை விழுங்கிய குழந்தை மூச்சு திணறுவதை கண்ட தாயார் அளவெட்டி வைத்தியசாலைக்கு எடுத்து சென்றுள்ளார். அங்கிருந்து மேலதிக சிகிச்சைக்காக தெல்லிப்பளை வைத்தியசாலைக்க கொண்டு செல்லும் வழியிலேயே உயிரிழந்துள்ளார்.
பிள்ளையின் சடலம் பிரேதப் பரிசோதனைகளின் பின்னர் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் தெல்லிப்பளைப் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
0 comments :
Post a Comment