Tuesday, November 13, 2012

இந்தியாவின் பீகார் முதல் மந்திரி பாகிஸ்தான் விஜயம்

பாகிஸ்தானின் சிந்த் மாகாணம் மற்றும் கராச்சி நகரில் பீகார் முதல் மந்திரி நிதிஷ் குமார், கடந்த 3 நாட்களாக சுற்றுப்பயணம் செய்து பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்றார்.நேற்று கராச்சியிலிருந்து பாகிஸ்தான் தலைநகரமான இஸ்லாமாபாத்திற்கு அவர் பயணமானார்.முன்னதாக, கராச்சி கவர்னர் இஷ்ரத்-உல்-இபாத் அளித்த வரவேற்பு விருந்தில் பங்கேற்ற நிதிஷ்குமார் பேசியதாவது:-

இந்தியா-பாகிஸ்தான் உறவுகள் வலுப்பட்டு வருவதை பார்த்து நான் மகிழ்ச்சியடைகிறேன். இது ஒரு நல்ல முன்னேற்றமாகும். நல்ல ஆட்சி குறித்து ஒருவரின் அனுபவத்தை வைத்து மற்றவர் பாடம் பெறலாம்.

எனது தலைமையிலான பீகார் அரசு, சட்டம்-ஒழுங்கை பராமரிக்க சிறப்பு கவனம் செலுத்தி வருகிறது. அரசியல், சமூக பொருளாதார பலம் படைத்த குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

பெண் கல்வியை ஊக்குவிக்க, இலவச கல்வி உபகரணங்கள், சீருடை, சைக்கிள் ஆகியவற்றை பீகார் அரசு வழங்குகின்றது.

தெற்கு ஆசிய பிராந்தியத்தில் அமைதியையும், வளத்தையும் ஏற்படுத்த பாகிஸ்தானும் இந்தியாவும் இணைந்து பணியாற்ற வேண்டும் என்ற பலத்த நம்பிக்கையுடன் நான் இஸ்லாமாபாத் செல்கிறேன்.

இவ்வாறு அவர் பேசினார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com