Wednesday, November 28, 2012

புறமுதுகு காட்டி ஓடிய புலிகள், ஓடும்போது மக்களின் சொத்துக்களுக்கு தேசம் விளைவித்தனர்.

இறுதி கட்ட யுத்தத்தின்போதும் யாழ்பாணத்தை படையினர் கைப்பற்றியபோது படையினரின் தாக்குதலுக்கு முகம் கொடுக்க முடியாது புறமுதுகு காட்டி ஓடிய புலிகள் ஒடும்போது மக்களின் சொத்துக்களுக்கு பாரிய சேதத்தினை ஏற்படுத்திச் சென்றதாகவும் இன்று அச்சேதங்கள் அரச தரப்பினரால் புனர்நிர்மானம் செய்யப்படுவதாகவும் டக்ளஸ் தேவானந்தா கடந்த 24ம் திகதி இடம்பெற்ற பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் - 2013 வரவு செலவுத் திட்ட ஒதுக்கீட்டின் குழுநிலை விவாதத்தின் தெரிவித்துள்ளார்.

அவர் அங்கு ஆற்றிய உரையின் முழுவடிவம் வருமாறு..

கௌரவ குழுக்களின் தலைவர் அவர்களே,
பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் 2013 ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத்திட்ட மதிப்பீட்டு குழுநிலை விவாதத்தின் போது அதில் கலந்து கொண்டு உரையாற்றுவதற்கு எனக்கு சந்தர்ப்பம் கிடைத்ததையிட்டு மகிழ்ச்சி அடைகின்றேன். அதிமேதகு ஜனாதிபதி அவர்களின் வழிகாட்டலிலும், கௌரவ பஸில்ராஜபக்ஷ அவர்களது பணிப்புரைகளின் கீழும் அரசாங்கத்தினாலும் குறிப்பாக, பொருளாதார அபிவிருத்தி அமைச்சினாலும், மேற்கொள்ளப்பட்டு வரும் உறுதிப்பாட்டுடன் கூடிய அர்ப்பணிப்பான செயற்பாடுகளினால்; யுத்தத்தால் பாதிப்படைந்த வடக்கு கிழக்கு மாகாணங்களின்; மீள்நிர்மாண வேலைத்திட்டங்கள் புதுப்பொலிவுடன் பொருளாதார அபிவிருத்தியை கண்டு வருகின்றது.

அரசாங்கப் படைகளுடன் ஆயுத மோதல்களில் ஈடுபட்ட எல்.ரி.ரி.ஈ. யினர், முன்னேறிவரும் படையினருக்கு தாக்குப்பிடிக்க முடியாது பின்வாங்கி ஓடியபோது, பொதுமக்களின் உடமைகளுக்கும், உட்கட்டமைப்புக்களுக்கும் பாரிய சேதங்களை விளைவித்து பலத்த அழிவுகளை உண்டு பண்ணினர்.யாழ்ப்பாண குடாநாட்டிலிருந்து அவர்கள் பின்வாங்கிய போது அதனையே செய்தனர்;; கிழக்கு மாகாணத்திலிருந்து விரட்டப்பட்ட போதும் அவ்வாறே நடந்து கொண்டனர்; இறுதியாக வன்னிப் பிரதேசத்தில் முள்ளிவாய்க்கால் சிறுதுண்டுக்குள் முடக்கப்படும்வரை அதனையே தொடர்ந்தும் செய்தனர்.

மேலும் பாடசாலைகள், வணக்கத்தலங்கள், வைத்தியசாலைகள் கூட பாதுகாப்பு படைகளுக்கு எதிரான அவர்களது தாக்குதல்களுக்கு பயன்படுத்தப்பட்டமையால், அக்கட்டிடங்களுக்கு பலத்த சேதங்கள் ஏற்பட்டன.

அவர்களது அவ்வாறான அழிவு நடவடிக்கைகளினால் பாரிய இழப்புக்கள் ஏற்பட்டன. கிளிநொச்சியில் ஏ-9 வீதிக்கு அருகாமையில் சேதமுற்று வீழ்ந்து கிடக்கும் பாரிய நீர்த்தாங்கியானது இக்கூற்றுக்கு சான்று பகி;ரும். உட்கட்டமைப்பு வசதிகளான வீதிகள், நீர்ப்பாசன குளங்கள், கால்வாய்கள் போன்றவற்றைப் பேணுவதற்காக அரசாங்கத்தினால் கடந்த காலங்களில் ஒதுக்கப்பட்ட நிதிகள், இயந்திரசாதனங்கள் மற்றும் அனுப்பி வைக்கப்பட்ட மூலப்பொருட்கள் ஆகியன எல்.ரி.ரி.ஈ.யினரின் ஆணைக்கிணங்கவே பயன்படுத்தப்பட்டமையினால், அவ் உட்கட்டமைப்புக்கள் முறையாக பராமரிக்கப்படவில்லை.
ஏனைய மாகாணங்களுக்கு இணையாக அபிவிருத்தி நடவடிக்கைகள் பேணப்படாததனால், மூன்று தசாப்தங்களுக்கு மேலாக பொருளாதார வளர்ச்சியினை மேம்படுத்த முடியாதவாறு, வடக்கு கிழக்கு மாகாணங்கள் பின்தங்கிய நிலையில் முடக்கப்பட்டிருந்தன.

மே 2009 இல் முரண்பாடுகளை முடிவுக்கு கொண்டு வந்த பின்னர் அரசாங்கத்திற்குப் பாரியதொரு பொறுப்புகாத்திருந்தது. அந்த நிலையிலேயே, பொருளாதார அபிவிருத்தி அமைச்சு, மஹிந்த சிந்தனையின் வழிகாட்டுதலின் அடிப்படையில் அச்சவாலை ஏற்றுக் கொண்டது.
வட மாகாணத்தை துரிதமாக அபிவிருத்தியடைச் செய்து புதுப்பொலிவுடன் திகழச்செய்யும் முகமாக, அதிமேதகு ஜனாதிபதி பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பஸில் ராஜபக்ஷ தலைமையில் ஜனாதிபதி செயலணியை நியமித்தார். மீள்குடியேற்றம் மற்றும் புனர்வாழ்வு நடவடிக்கைகளை முன்னெடுத்துச் செல்லும் முகமாக மும்முனைத்திட்ட அணுகுமுறையொன்றினை அச்செயலணி உருவாக்கியது. அதன் முதற்கட்ட நடவடிக்கையாக, பெருந்தொகையில் இடம்பெயர்ந்த மக்களுக்கான நிவாரணம் மற்றும் மனிதாபிமானப் பணிகளை மேற்கொண்டு அவர்களை மீள்குடியேற்றம் செய்வது, முழு அளவிலான உட்கட்டமைப்பு வசதிகளை பூர்த்தியாக்குவது போன்ற நடவடிக்கைகளுக்கான செயற்திட்டங்கள் முன்னுரிமை அடிப்படையில் வகுக்கப்பட்டன.

இரண்டாவது அணுகுமுறையானது மீள்குடியேற்றம் செய்யப்படுவோருக்கு அவர்களது ஜீவனோபாயத்தை மீண்டும் ஏற்படுத்தும் முகமாகவும், பொருளாதார நடவடிக்கைகளை ஆரம்பிக்கும் வகையிலும் உதவுவதற்கான வேலைத்திட்டங்களை செயற்படுத்துவதாகும்.
அது 'ஆரம்ப மீட்பு நடவடிக்கை' (நுசுP) என அழைக்கப்பட்டது. பிரதான உட்கட்டமைப்பு வசதிகளை அபிவிருத்தி செய்தல் மூன்றாவது அணுகுமுறையாகும்.

'வடக்கின் வசந்தம்' என்ற பெயரில் மீள்குடியேற்றம், அபிவிருத்தி, மற்றும் புனர்நிர்மாண நடவடிக்கைகளை உள்ளடக்கியதாக, ஜனாதிபதி செயலணி பாரிய திட்டமொன்றினை உருவாக்கியது. துரித மீள்குடியேற்றம் மற்றும் மீட்புமுறைமை போன்றன திட்ட நிகழ்ச்சி நிரலில் அடங்கியிருந்தன. இதேபோன்ற திட்டமொன்று கிழக்கு மாகாணத்திலும் 'கிழக்கின் உதயம்' என்ற பெயரில் உருவாக்கப்பட்டது. தீர்க்கதரிசனத்துடனும், பற்றுறுதியுடனும் கூடியதாக அரசாங்கத்தினால் உருவாக்கப்பட்ட அத்திட்டங்கள் அம் மாகாணங்களில் நீடித்த உறுதியான ஸ்திரப்பாட்டினை ஏற்படுத்துவதை நோக்கமாகக் கொண்டவையாகும்.

குறிப்பிட்ட மாகாணங்களுக்கான புனர்வாழ்வு மற்றும் அபிவிருத்தி நடவடிக்கைகளானவை நெடுஞ்சாலைகள் புனரமைப்பு முக்கிய மாகாண, கிராமிய வீதிகள், இரயில் பாதைகள், பாலங்கள், கிராமக்குளங்கள், வீடமைப்பு நிர்மாணங்கள் உட்பட சேதமடைந்த வீடுகளைத் திருத்துதல் பொது இடங்கள், வணக்கஸ்த்தலங்கள், பாடசாலைகள், வைத்தியசாலைகள், பெரியளவிலான நீர்ப்பாசன, நீர்விநியோக திட்டங்கள் என்பனவற்றுடன் தொலைத்தொடர்புகள் வசதிகள், மின் இணைப்புத்திட்ட வலை அமைப்புகள் போன்ற பரந்தளவிலான வேலைத்திட்டங்களை திட்டமிட்டு செயற்படுத்துவதனை நோக்காகக் கொண்டிருந்தது.
இன்று நிவாரண மற்றும் மனிதாபிமான உதவிப்பணிகள் மிகவும் திருப்திகரமான முறையில் பூர்த்திசெய்யப்பட்டுள்ளதை இன்று நாம் காணக்கூடியதாக உள்ளது. 469,838 உறுப்பினர்களைக் கொண்ட 142,230 குடும்பங்கள் வடக்கு மாகாணத்திலும், 282,276 உறுப்பினர்களைக் கொண்ட 78,916 குடும்பங்கள் கிழக்கு மாகாணத்திலும் குடியேற்றப்பட்டுள்ளன.

'கண்ணிவெடி அகற்றல்'; என்றவகையில் வடக்கில் ஆபத்தானதென உறுதிசெய்யப்பட்ட 1,418 மில்லியன் சதுர மீற்றரில், 1,330 மில்லியன் சதுரமீற்றர் இதுவரை பூர்த்தியாகியுள்ளது. இடம்பெயர்ந்த மக்களினை குடியேற்றுவதற்கு முன்னதாக, அரசாங்கத்தினால் பூர்த்தி செய்யப்பட்ட பாரிய சவால் இதுவாகும்.

துரிதமீட்பு நடவடிக்கையின் கீழ் மீள்குடியேற்றப்பட்ட ஒவ்வொரு குடும்பத்திற்கும் அவர்களது ஜீவனோபாயத்திற்கான பொருளாதார நடவடிக்கைகளினை ஆரம்பிப்பதற்கு ரூ.35இ000ஃஸ்ரீ க்கும் குறையாத தொகை வழங்கப்பட்டதுடன், 2009 – 2011 காலப்பகுதியில் விவசாயத்தை மீண்டும் ஆரம்பிப்பதற்கு அனுசரணையான சூழலை தோற்றுவிக்கும் முகமாக, வடக்கில் 6,652 ஹெக்ரார் பரப்பளவுகாடு துப்பரவு செய்யப்பட்டுள்ளது. இதற்காக அரசாங்கம் 172 மில்லியன்களை செலவு செய்துள்ளது.

வடக்கிற்கான சமூக உட்கட்டமைப்பு அபிவிருத்தி செய்வதற்கு மட்டும் 3.2 பில்லியன் அமெரிக்க டொலர்களை அரசாங்கம் ஒதுக்கியிருந்தது. கடந்த மூன்று வருட காலத்திலும் பெறப்பட்ட வெளிநாட்டு நிதி முழுவதும் வடக்கு அபிவிருத்திக்காக மட்டுமே செலவு செய்யப்பட்டுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது. இதற்கான பாராட்டுக்கும், நன்றிக்கும் உரித்தானவர் அமைச்சர் பஸில்ராஜபக்ஷ ஆவார். இதனை தங்கள் கவனத்திற்கு எடுக்கும் வண்ணம் அராசங்கத்தின் பெயரை சர்வதேச ரீதியாக மழுங்க வைக்கும் வகையில் பிரச்சார நடவடிக்கைகளில் ஈடுபட்டு வரும் பாராளுமன்றத்திலிருக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் எனது சகாக்களை கேட்டுக் கொள்ள விரும்புகின்றேன்.

அவர்களுக்கு மேலும் தெளிவூட்டும் வகையில், 2009 – 2011 காலப்பகுதியில் வட மாகாணத்தில் அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்ட பாரிய புனர்வாழ்வு மற்றும் அபிவிருத்திப் பணிகளின் விபரத்தை இச்சபையின் முன் சமர்ப்பிக்க விரும்புகிறேன்.

9,670 வீடுகள் திருத்தப்பட்;டு, 27,983 வீடுகள் நிர்மாணிக்கப்பட்டுள்ளன. முழு நாட்டினதும் சுகாதாரப் பணிகளுக்கு ஒதுக்கப்பட்ட 15,600 மில்லியனில், ரூ.3,100 மில்லியன் வடக்கிற்கு மட்டும் செலவிடப்பட்டுள்ளது. இன்னொரு வகையில் கூறுவதானால் வடக்கிற்கான சுகாதாரச் செலவுக்காக தலா ரூ.2,924 செலவிடப்பட்டுள்ளது. அதேவேளை நாட்டின் ஏனைய பகுதிகளுக்கான சுகாதாரச் செலவீனம் தலா. ரூ.812 ஆகும். மேலும் ரூ. 9,254 மில்லியன் எதிர்கால விசேட திட்டங்களுக்காக சுகாதாரப் பிரிவுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
1,341 மில்லியன் ரூபா செலவில் 1,630 பாடசாலைகள் புனர் நிர்மாணம் செய்யப்பட்டுள்ளன. நீர், மற்றும் கழிவுநீர் சேவைகளுக்கு ரூ. 29,912 மில்லியன் செலவிடப்பட்டுள்ளது. ரூ.13,240 மில்லியன் மின்சார மீளமைப்புக்கு செலவிடப்பட்டுள்ளது. ரூபா. 686 மில்லியன் செலவில் வணக்கஸ்தலங்கள் புனரமைக்கப்பட்டன.இதன் விபரங்களாவன: இந்துக் கோவில்களுக்கு ரூ.132 மில்லியன்,; பௌத்தஸ்தலங்களுக்கு ரூ.2.3மில்லியன், இஸ்லாமிய வணக்கஸ்த்தலங்களுக்கு ரூ.1.6 மில்லியன், கத்தோலிக்க வணக்கஸ்த்தலங்களுக்கு ரூ.550 மில்லியன். கத்தோலிக்க வணக்கஸ்த்தலங்களுக்கு ஒதுக்க்பட்ட நிதியில் ரூ.447 மில்லியன் மடுதேவாலய புதுப்பித்தலுக்காக மட்டும் செலவிட்பட்டுள்ளது. இதில் கவலைக்குரிய விடயம் என்னவெனில், அண்மையில் 'ஸ்கைப்' மூலமாக ஜெனீவாவில் கூடியிருந்த ஒரு பகுதியினருக்கு உரையாற்றிய வண. பிஷப் ராயப்பு யோசேப் இது குறித்து, எதுவும் தெரிவிக்காததாகும்.

மேலும் ரூ.4,524 மில்லியன் குளங்களின் புனரமைப்புக்காக செலவிடப்பட்டுள்ளது. நெடுஞ்சாலைகள், மாகாண வீதிகள் மற்றும் கிராமிய வீதிகள் புனரமைப்புக்காக, ரூ.22, 623 மில்லியன் ஏற்கனவே செலவிடப்பட்டுள்ளது. இவற்றின் தொடர் வேலைத்திட்டங்களுக்கு மேலும் ரூ.51,384 மில்லியன் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இவ் வேலைத்திட்டங்கள் 2015 இல் முடிவுற்றதும் 7,500 கிலோ மீட்டர் பாதைகள் புதிய பொலிவுடன் காணப்படும். வடக்கின் ரயில்வே கட்டமைப்பினை புனரமைக்கும் பணிகள் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டு விட்டது. இவ் வேலைத்திட்டங்கள் 2,015 ஜூன் மாதம் பூர்த்தியாகிவிடும். இவ் வேலைத்திட்டங்களுக்கு ரூ. 652 அமெரிக்கன் டொலர் செலவளிக்கப்படவுள்ளது. சங்குபிட்டி, புதியமன்னார் மற்றும் அருவியாறு பாலங்கள் முறையே ரூ.983 மில்லியன், ரூ. 2,460 மில்லியன் மற்றும் ரூ. 151 மில்லியன் செலவில் நிர்மாணிக்கப்பட்டுள்ளன. மேலே கூறிய இவ் வேலைத்திட்டங்களுக்கு பொருளாதார அபிவிருத்தி அமைச்சினால் மொத்தம் ரூ.33,962 மில்லியன் நேரடியாக செலவு செய்யப்பட்டுள்ளது.

அரசாங்கத்தின் வேண்டுகோளிற்கிணங்க இந்திய அரசாங்கம் வடக்கில் முன்னோடி வேலைத் திட்டத்தின் அப்படையில் 1,000 வீடுகளை ஏற்கனவே கட்டித்தந்துள்ளது. அங்கு மேலும் 35,000 வீடுகளைக் கட்டுவதற்கு இந்திய அரசாங்கத்தினால் உறுதியளிக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் இரண்டாவது கட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கான செயற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. அத்துடன் கிளிநொச்சியில் பொறியியல் பீடம் ஒன்றை நிறுவுதற்கும், விவசாய பீடத்தை இடமாற்றுவதற்குமென இந்திய அரசாங்கம் ரூ. 4 மில்லியன் டொலர்களை செலவிடுவதற்கு இணங்கியுள்ளது.

இம்மாகாணத்தினை மேலும் அபிவிருத்தி செய்வதற்கு அரசாங்கத்தின் முயற்சிகாரணமாக பல வெளிநாட்டு உதவிகள் இவ்வாண்டில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளன. ரூ.8.3 மில்லியன் டொலர் செலவில் கிளிநொச்சியில் நீர் விநியோகத்திட்டத்தினை புனரமைப்புச் செய்வதற்கு ஜப்பான் அரசாங்கம் ஒப்புக் கொண்டுள்ளது. வடக்கில் 5.3 மில்லியன் டொலர் செலவில் ஒரு தொழிற்பயிற்சி நிலையத்தை ஜேர்மனி நிர்மாணிக்க உள்ளது. உணவு மற்றும் விவசாய நிறுவனம் (குயுழு) கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவில் நீர்ப்பாசன மற்றும் விவசாயம் சார்ந்த வாழ்வாதார அபிவிருத்திக்கு 4.4 மில்லியன் டொலரை செலவிடவுள்ளது. இரணைமடு நீர்ப்பாசன அபிவிருத்;தித் திட்டத்திற்கென விவசாய அபிவிருத்திக்கான சர்வதேச நிதியிலிருந்து ரூ.220 மில்லியன் டொலர் கிடைக்கவுள்ளது. இவை தொடர்பான ஒப்பந்தங்கள் ஏற்கனவே கைச்சாத்திடப்பட்டுள்ளன.

எமது அரசாங்கத்தின் அபிவிருத்தி முயற்சியானது, மீள்குடியேற்றம் மற்றும் உட்கட்டமைப்பு அபிவிருத்தியுடன் மட்டுப்படுத்தப்பட்டவொன்றல்ல. வாழ்வின் எழுச்சி (திவிநெகும) வேலைத்திட்டம் அதிமேதகு ஜனாதிபதியின் சிந்தனையில் உதித்த ஒரு கருப்பொருளாகும். மனைசார் பொருளாதார நடவடிக்கைகளுக்கு புத்துயிர் அளிப்பதே இதன் நோக்கமாகும். இந்நடவடிக்கைகள் கௌரவ பசில்ராஜபக்ஷ அவர்களின் வழிகாட்டலில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இத்திட்டத்தின் கீழ் வடபகுதி மக்களே அதிக பயனைப் பெறுகின்றார்கள்.
அத்துடன், 30 ஆண்டுகாலமாக இடம்பெற்றுவந்த மோதல்களினால் பாதிக்கப்பட்ட பகுதிகளின் பொருளாதார நடவடிக்கைக்கு புத்தூக்கம் அளிப்பதற்காக அரசாங்கம் பிரத்தியேகமாக வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களுக்கென பல்வேறு மீள்குடியேற்றுத்திட்டங்களை உருவாக்கியுள்ளது. 2011 ஆம் ஆண்டில் மட்டும், 'வடக்கின் எழுச்சி' 'பிரபோதினி' 'சருசற்' அபிவிருத்தி, 'மாகாண அபிவிருத்தி', மற்றும்'; 'சௌபாக்கிய' போன்ற பல கடன் திட்டங்களின் கீழ் வடமாகணத்தில் ரூ.5,527 மில்லியன் ரூபா கடன்கள் 50,640 நபர்களுக்கு வழங்கப்பட்டுள்ளன.
2012 ஆம் ஆண்டில் இக்கடன்கள் 23 வீதத்தினால் அதிகரித்த தொகையாகக் காணப்படுமென உத்தேசிக்கப்பட்டுள்ளது.

அரசாங்கத்தின் இவ்வாறன முயற்சிகள் பெறுபேறுகளைத்தர ஆரம்பித்துள்ளன. நெல் அறுவடை அதிகரித்து வருகிறது. மீன் உற்பத்தி பெருகிவருகின்றது. மொத்தத்தில் வடக்கின் மொத்த உள்ளுர் உற்பத்தி (புனுP) துரிதமாக அதிகரித்து வருகின்றது. 2010 ஆம் ஆண்டில் அது 190 இல் இருந்து. 2011 ஆண்டில் 241 ஆக உயர்ந்துள்ளது. வடபகுதியின் மொத்த உள்ளூர் உற்பத்தியினது நாட்டின் மொத்த உள்ளூர் உற்பத்திக்கான பங்களிப்பு 2010 இல் 3.4 மூ ஆக இருந்து. 2011 இல் 3.7 மூ ஆக உயர்ந்துள்ளது. மாகாணங்களின் வள சுட்டெண்ணின்படி, வட மாகாணம் ஏனைய எல்லா மாகாணங்களிலும்பார்க்க ஆகக் குறைவானதான 9 ஆவது இடத்தில் 2007 இல் காணப்பட்டது. 2007 இல் அதன் சுட்டெண் 43.6 ஆகும். 2011 இல் அச் சுட்டெண் 55.6 ஆக உயர்ந்துள்ளதோடு 6 ஆவது இடத்தில் உள்ளது.

கௌரவ தலைவர் அவர்களே,

இவை வடக்கில் 2009 க்கும், 2011 க்கும் இடையே காணப்படும் முன்னேற்றத்தின் சில முக்கிய விபரங்களாகும். ஆனால் பொருளாதார அபிவிருத்தி அமைச்சினால் மேற்கொள்ளப்பட்டு வரும் பாரிய (ஆநபய) அபிவிருத்தித்திட்டங்கள் 2015 ஆம் ஆண்டளவில் முடிவு பெறும் பொழுது இம் மாகாணத்தின் உண்மையான வளர்ச்சி தெரியவரும்.

இந்நாட்டு மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்துவதற்கு, குறிப்பாக நீண்டகால முரண்பாடுகளினால் பாதிக்கப்பட்ட வடக்கு மற்றும் கிழக்கு வாழ்மக்களின் தரத்தை உயர்த்துவதற்கு அரசாங்கம் மேற்கொண்டு வரும் அபிவிருத்தி முயற்சிகளுக்கு தடைபோட வேண்டாமென்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களை மீண்டும் நான் கேட்டுக் கொள்ள விரும்புகின்றேன்.

எல்.ரி.ரி.ஈ யினரின் நடவடிக்கைகள் காரணமாக நாம் ஏற்கனவே பௌதீகரீதியாகவும், அரசியல் ரீதியாகவும் இருந்தவற்றை இழக்க வேண்டி நேர்ந்தது. வன்முறை நடவடிக்கைகளில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நேரடியாக சம்பந்தப்படாமல் இருந்த போதிலும், அவர்களது அரசியல் பேச்சுக்கள் எப்பொழுதுமே கெடுதியான விளைவு கொண்டதாகவும் அவ நம்பிக்கைத் தரும் செய்திகளைக் கொண்டதாகவும் இருக்கின்றன. அவநம்பிக்கை கொண்ட பேச்சுக்கள் தொடர்ந்து இடம்பெறுமேயானால் அது வன்முறையை தூண்டி விடுவதோடு, இனங்களிற்கிடையே நல்லிணக்கத்தினை ஏற்படுத்துவதற்கான செயற்பாடுகளுக்கும் மற்றும் அரசியல் தீர்வொன்றினைக் காண்பதற்கும்; தடையாக இருந்துவிடக் கூடும். எனவே அத்தகைய பேச்சுக்களைத் தவிர்த்துக் கொள்ளுமாறு அவர்களை நான் வேண்டிக் கொள்கின்றேன்.

No comments:

Post a Comment