மதுபானசாலைக்கு எதிராக மக்கள் ஆர்ப்பாட்டம்
மட்டக்களப்பு ஆரையம்பதி பிரதேச செயலாளர் பிரிவில் ஏற்கனவே ஆறு மதுபானசாலைகள் இயங்குகின்ற நிலையில் ஏழாவதாகத் மண்முனைப்பற்றில் திறக்கப்படவுள்ள மதுபானசாலையை தடுத்து நிறுத்தக் கோரி பொது மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் வேடர் குடியிருப்பு, புதுக்குடியிருப்பு, கிரான்குளம், காங்கயனோடை, தாழங்குடா உள்ளிட்ட கிராமங்களைச் சேர்ந்த மக்களே கலந்து கொண்டனர்.
மட்டக்களப்பு காந்திசிலைக்கு முன்பாகவிருந்து பேரணியாகச் சென்ற மக்கள் மட்டக்களப்பு கச்சேரிக்கு முன்பாக இறுதியாகச் சென்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதன்போது மதுபானசாலைக்கான அனுமதியை இரத்துச்செய்யுமாறு கோரும் மகஜர் ஒன்றையும் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபரிடம் ஒப்படைத்தனர்
'7ஆவது மதுபானசாலை வேண்டாம்', 'மதுபானசாலைகளின் மாநகரமா மண்முனைப்பற்றுப் பிரதேசம்', 'நிறுத்து அனுமதியை' போன்ற வாசகங்கள் எழுதப்பட்ட பதாதைகளையும் ஆர்ப்பாட்டக்காரர்கள் தாங்கியிருந்தனர் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.
0 comments :
Post a Comment