Thursday, November 8, 2012

தென்ஆப்பிரிக்கா- ஆஸ்திரேலியா முதல் டெஸ்ட் போட்டி நாளை தொடங்குகிறது.

சுமித் தலைமையிலான தென்ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி 3 டெஸ்ட் போட்டிகளில் விளையாடுவதற்காக ஆஸ்திரேலியா சென்றுள்ளது. ஆஸ்திரேலியா- தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதும் முதல் டெஸ்ட் போட்டி பிரிஸ்பேனில் நாளை (வெள்ளிக்கிழமை) தொடங்குகிறது.

இரு அணிகள் இடையே டெஸ்ட் தொடர் நம்பர்-1 இடத்தை முடிவு செய்தாக இருக்கும். தற்போது டெஸ்ட் தரவரிசையில் தென் ஆப்பிரிக்கா 120 புள்ளிகளுடன் முதல் இடத்தில் உள்ளது. இங்கிலாந்து அணி 117 புள்ளிகளுடன் 2-வது இடத்திலும், ஆஸ்திரேலியா 116 புள்ளிகளுடன் 3-வது இடத்திலும் உள்ளன.

தென்ஆப்பிரிக்க அணி நம்பர்-1 இடத்தை தக்க வைக்க டெஸ்ட் தொடரை சமன் செய்தாலே போதும்.

டெஸ்ட் போட்டியில் முன்பு கொடிகட்டி பறந்த ஆஸ்திரேலியா 3 ஆண்டுகளுக்கு முன்பு நம்பர்-1 இடத்தை இழந்தது. தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான 3 டெஸ்டிலும் வென்றால் அந்த அணி முதல் இடத்தை பிடிக்கும். அதே நேரத்தில் இந்தியா- இங்கிலாந்து தொடரை பொறுத்து தரவரிசை அமையும்.

தென்ஆப்பிரிக்கா- ஆஸ்திரேலியா அணிகள் பலம் வாய்ந்தவை. இதனால் இந்த டெஸ்ட் தொடர் மிகவும் விறுவிறுப்பாக இருக்கும். இரு அணி வீரர்கள் வருமாறு:-

ஆஸ்திரேலியா: கிளார்க் (கேப்டன்), எட்கோவன், பாண்டிங், மைக் ஹஸ்சி, வார்னர், வடே, ராய்குய்னி, பேட்டின்சன், ஸ்டார்க், ஹில்பெனாஸ், லயன், பீட்டர் சிடில்.

தென்ஆப்பிரிக்கா: சுமித் (கேப்டன்), அம்லா, டிவில்லியர்ஸ், டுமினி, காலிஸ், டுபெலிசிஸ், இம்ரான் தாகீர், மோர்னே மோர்கல், வெரோன் பிலாண்டர், ஸ்டெய்ன், அல்விரோ பீட்டர்சன், ரோடு கிளைன் வெல்ட், ராபின் பீட்டர்சன், ரூடால்ப், டிசோலேக்ளே.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com