ஆள் மாறாட்டம், ஓர் எச்சரிக்கை
என்னுடைய பெயர் Dr.அமிர்தலிங்கம் பகீரதன். நான் தற்பொழுது ஒரு மருத்துவராக ஐக்கிய இராய்ச்சியத்தில் வேலை செய்கிறேன். நான் திரு அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கம் அவர்களின் இரண்டாவது மகன். திரு அமிர்தலிங்கம் தமிழர் விடுதலைக் கூட்டணியின் பொதுச் செயலாளராகவும், இலங்கைப் பாராளுமன்ற எதிர்க் கட்சித் தலைவராகவும், தமிழர் பிரதிநிதியாகப் பல வருடங்கள் பாராளுமன்ற உறுப்பினராகவும் இருந்தவர். சமீபத்தில் என்னுடைய பெயரைச் சொல்லி ஓர் ஏமாற்றுக்காரர் தான் கனடாவில் வசிப்பதாகவும் மக்களை வெளிநாட்டுக்கு அனுப்புவதாகவும் சொல்லி மக்களிடம் பணமும் பாஸ்போர்ட்டும் பறித்துக்கொண்டு இருக்கிறார். பின் அங்கிருந்து பணத்துடன் காணாமற்போய்விடுவார் என்பது என் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டுள்ளது..
இப்படியான நடவடிக்கை முன்னரும் நடந்துள்ளது. 1997இல் அந்த நபர் பிடிபட்டு மோசடி வழக்கில் குற்றஞ் சாட்டப்பட்டார். இதில் ஒருவரோ அல்லது ஒருசிலர் கூட்டாகவோ இணைந்து செற்படுவதாக நான் கருதுகிறேன். நான் இந்தமாதிரியான சட்டவிரோத நடவடிக்கைகள் எதிலும் ஈடுபட்டது கிடையாது. ஈடுபடுவதும் இல்லை. என் பெயரைச் சொல்லி அல்லது வேறுவிதமாக யாராவது உங்களை அணுகினால் தயவுசெய்து காவல் துறையினருடன் உடனடியாகத் தொடர்பு கொள்ளவும். ஏமாற்றப்பட்டவர்களுக்கும் இவரிடம் பொருளை இழந்தவர்களுக்கும் என் வருத்தத்தைத் தெரிவிக்கும் அதே வேளை இச்சம்பவம் எதற்கும் நான் பொறுப்பல்ல என்பதையும் தெரிவிக்க விரும்புகிறேன்.
0 comments :
Post a Comment