Tuesday, November 27, 2012

செவ்வாய் கிரகத்தில் புழுதி புயல்.

பூமியில் இருந்து 57 கோடி கி.மீட்டர் தூரத்தில் செவ்வாய் கிரகம் உள்ளது. இங்கு உயிரினங்கள் வாழமுடியுமா? என்ற ஆராய்ச்சியில் அமெரிக்காவின் நாசா மையம் ஈடுபட்டுள்ளது.

அதற்காக கடந்த ஆண்டு நவம்பர் மாதம் ரோவர் விண்கலம் செலுத்தப்பட்டது. அது கடந்த ஆகஸ்டு மாதம் தரை இறங்கியது. ரோவருடன் இணைக்கப்பட்ட கியூரியாசிட்டி என்ற ரோபோ ஆய்வு கூடம் செவ்வாய் கிரகத்தின் சுற்றுச்சூழல் மற்றும் மண் அமைப்பு உள்ளிட்டவற்றை போட்டோ எடுத்து அனுப்பி வருகிறது.

அங்குள்ள பாறைகள்இ மண் ஆகியவற்றை வெட்டி எடுத்து போட்டோ அனுப்பி வைத்தது. இந்த நிலையில் செவ்வாய் கிரகத்தில் ஏற்பட்ட புழுதி புயலை போட்டோ எடுத்து அனுப்பியுள்ளது. இந்த புழுதி புயல் அங்கு கடந்த 10-ந்தேதி வீசியுள்ளது.

இதன் மூலம் செவ்வாய் கிரகத்தில் சுற்று சூழல் மாறியுள்ளதையும் கியூரியாசிட்டி தெரிவித்துள்ளது. செவ்வாய் கிரகத்தில் புழுதி புயல் வீசிய படத்தை நாசா விஞ்ஞானிகள் சமீபத்தில் வெளியிட்டனர்.

No comments:

Post a Comment