அன்றியோட்டின் புதிய பதிப்பு வெளியீடு
கணனி மற்றும் கைப்பேசி இயங்குதளங்களில் முன்னணி வகிக்கும் கூகிள் நிறுவனமானது தனது Android இயங்குதளத்தின் புதிய பதிப்பானAndroid 4.2 Jelly Bean- இனை நேற்று அறிமுகப் படுத்தியுள்ளது.இவ் இயங்குதளமானது கூகுளினால் புதிதாக அறிமுகப்படுத்தப்படவுள்ள Nexus 4> Nexus 7 மற்றும் Nexus 10 ஆகிய கருவிகளிலும் பயன்பாட்டிற்கு வரவுள்ளது.
மேலும் இப்பதிப்பில் சில முக்கியமான அம்சங்கள் புதிதாக உள்ளடக்கப்பட்டுள்ளதுடன் முன்னய பதிப்புக்களில் எதிர்நோக்கப்பட்ட சிரமமான செயற்பாடுகளும் மாற்றியமைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.
இப்புதிய இயங்குதளத்தின் வருகையானது ஸ்மாட் போன் பாவனையில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்தும் என்று எதிர்வு கூறப்படுகின்றது
0 comments :
Post a Comment