கிளிநொச்சி பொதுச்சந்தை பங்கீட்டில் மோசடி! வர்த்தகர்கள் வீதியில் இறங்கி போராட்டம்.
கிளிநொச்சி பொதுசந்தை பங்கீட்டில் கடைப்பிடிக்கப்பட்ட பாராபட்சங்களை கண்டிக்கும் பொருட்டும் கரைச்சி பிரதேசசபையின் ஆளும் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் செயற்பாடுகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்தும் இன்று திங்கட்கிழமை (26) காலை நூற்றுக்கு மேற்பட்ட வர்த்தகர்கள் கண்டன ஆர்ப்பாட்ட உர்வலம் ஒன்றினை நடாத்தியுள்ளனர்.
இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது கிளிநொச்சி பொதுச்சந்தை பல மில்லியன் ரூபா செலவில் அரசினால் டிப்போச்சந்திக்கு அருகில் அமைக்கப்பட்டு அண்மையில் ஜனாதிபதியினால் திறந்து வைக்கப்பட்டது. இந்த நிலையில் தற்காலிகமாக தற்போது அம்பாள்குளம் பகுதியில் இயங்கிவரும் சந்தையினை புதிய கட்டிடத்தொகுதிக்குள் மாற்றுவதற்கு தீர்மானிக்ப்பட்ட நிலையில் மீன் மற்றும் மரக்கறி கடைகளை தவிர ஏனைய கடைகளுக்கும் தற்காலிக் கடைத்தொகுதிகள் அமைக்கப்பட்டு பணிகள் முடிவடைந்த நிலையில் இம்மாதம் புதிய இடத்திற்கு சந்தையின் அனைத்து வியாபார நடவடிக்கைகளும் ஆரம்பிக்க இருந்த நிலையில் ஒரு சில வியாபாரிகள் நீதிமன்றில் வழக்குத்தாக்கல் செய்தநிலையில் நீதிமன்றம் தற்போது புதிய சந்தைதொகுதியில் கடைககள் வழங்குவதற்கு இடைக்காலத்தடை விதித்துள்ளது.
எனவே இவ்வாறான நிலைமைக்கு கரைச்சி பிரதேச சபையின் நியாயமற்ற செயற்பாடுகளே காரணம் எனவும் கரைச்சி பிரதேச சபையில் ஆட்சியிலுள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் ஆரம்பம் தொட்டு சந்தையில் கடைகள் வழங்குவதில் பாரபட்சமாக நடந்துவருவதாகவும் 2008 ஆம் ஆண்டு காலப்பகுதியில் கிளிநொச்சி பொதுச்சந்தையில் கடைகள் வைத்து வியாபாரம் செய்யாதவர்கள் மற்றும் தமிழ்ததேசிய கூட்டமைப்பின் பிரதேச சபை உறுப்பினர்கள் அவர்களுக்கு நெருக்கமானவர்களுக்கு என கடைகள் வழங்குவதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டதன் விளைவாகவே இன்று கிளிநொச்சி சந்தையில் வியாபாரம் செய்து வரும் 320 மேற்பட்ட வியாபாரிகள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் எனவே யுத்தத்தினால் பெரும் பாதிப்புக்குள்ளான வர்த்தகர்களின் நலன்களை கருத்தில் எடுத்து செயற்படுமாறும் வலியுறுத்தி இந்த எதிர்ப்பு ஆர்ப்பாபட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
இன்று காலை பத்துமணியளவில் கிளிநொச்சி அம்பாள்குளம் சந்தையில் ஆரம்பமான எதிர்ப்பு ஊர்வலம் கிளிநொச்சி மாவட்டச்செயலகத்திற்கு சென்று அங்கு மாவட்ட அரச அதிபர் திருமதி றூபவதி கேதீ;வரன் அவர்களிடம் மகஜர் கையளிக்கப்பட்டதோடு பாராளுமன்ற உறுப்பினர் சிறிதரன் மற்றும் பாராளுமன்ற உறுப்பினரும்; குழுக்களின் பிரதிதலைவருமான சந்திரகுமார் ஆகியோருக்கான மகஜர்களும் அவர்களின் அலுவலகங்களுக்குச் சென்று கையளிக்கபட்டது.
0 comments :
Post a Comment