யாழ் தேவி தொடர்பான விசாரணைகள் இன்று ஆரம்பமானது.
யாழ் தேவி ரயிலின் 11 பெட்டிகள் எஞ்சின் இல்லாமல் பின்நோக்கி சென்றமை தொடர்பான விசாரணைகள் இன்று ஆரம்பிக்கப்பட்டது.
இவ்விசாரணையை ஆரம்பிப்பதற்காக மூவர் அடங்கிய குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது. ரயில்வே திணைக்களத்தின் பிரதி முகாமையாளர் காமினி செனவிரத்ன இக்குழுவின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
பிரதி போக்குவரத்து பொறியியலாளர் கீர்த்தி ஹேவா வித்தாரன, அநுராதபுர மாவட்டத்திற்கு பொறுப்பான போக்குவரத்து அத்தியட்சகர் ஏ.ஆர்.எம்.அபேரத்ன, ஆகியோர் குழுவின் ஏனைய உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
குறித்த ரயிலின் பிரதம சாரதி, உதவியாளர், ரயிலின் பாதுகாவலர் மற்றும் உதவி பாதுகாவலர்களை சேவையிலிருந்து இடை நிறுத்துவதற்கும் அதிகாரிகள் தீர்மானித்துள்ளனர்;.
0 comments :
Post a Comment