Friday, November 9, 2012

இந்தியாவின் லியாண்டர் பயஸ்- ஸ்டெபானிக் ஜோடி அரையிறுதிக்கு முன்னேற்ற‌ம்

சர்வதேச தரவரிசையில் முதல் 8 இடங்களில் இருக்கும் வீரர்கள் மோதும் ஏ.டி.பி. உலக டூர் பைனல்ஸ் டென்னிஸ் தொடர் லண்டனில் நடைபெற்று வருகிறது. இதில் இந்தியாவின் லியாண்டர் பயஸ்-செக் குடியரசின் ஸ்டெபானிக் ஜோடி அரையிறுதிக்கு முன்னேறியது. குரூப் ஏ பிரிவில் இடம் பெற்றுள்ள இந்த ஜோடி, இன்று நடைபெற்ற 2-ம் சுற்று ஆட்டத்தில், 6-ம் தரநிலை ஜோடியான மார்சல் கிரானலர்ஸ்-மார்க் லோபேஸ் (ஸ்பெயின்) ஜோடியை எதிர்கொண்டது.

இப்போட்டியில் பயஸ் ஜோடி 7-5, 6-4 என்ற நேர்செட்களில் வெற்றி பெற்றதன் மூலம் அரையிறுதியை உறுதி செய்தது. இந்த ஜோடி முதல் போட்டியில் குரேஷி-ஜூலியன் ரோஜர் ஜோடியை வென்றது.

பயஸ்-ஸ்டெபானிக் ஜோடி இந்த ஆண்டில், ஆஸ்திரேலிய ஓபன், சோனி ஓபன் மற்றும் ஷாங்காய் ரோலக்ஸ் மாஸ்டர்ஸ் ஆகிய தொடர்களில் சாம்பியன் பட்டம் வென்றது குறிப்பிடத்தக்கது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com