வெள்ளை முள்ளிவாய்காலில் புலிகளால் மறைத்து வைக்கப்பட்ட தற்கொலை அங்கிகள் மீட்பு
வெள்ளை முள்ளிவாய்க்கால் பகுதியில் இருந்து விடுதலைப்புலிகளால் மறைத்து வைக்கப்பட்டிருந்த பயன்படுத்தப்படாத புதிய ஆறு தற்கொலை அங்ககைள் விசேட புலனாய்வுப் பிரிவினரால் மீட்கப்பட்டுள்ளதாக யாழ். மாவட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் எரிக்பேரேரா தெரிவித்துள்ளார் இன்று நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் யாழ். மாவட்ட பிரதிப்பொலிஸ் மா அதிபர் எரிக்பேரேரா இதனைக் கூறியுள்ளார்.
புலனாய்வுப் பரிவினருக்கு கிடைத்த தகவலையடுத்து, கடந்த 26 ஆம் திகதி யாழ்ப்பாணத்திலிருந்து சென்ற விசேட பொலிஸாரால் இவை மீட்கப்பட்டுள்ளன.
முள்ளிவாய்கால் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையின் போது இந்த அங்கிகள் மீட்கப்பட்டதாகவும் மீட்கப்பட்ட அங்கிள் அனைத்தும் ஒவ்வொன்றும் வௌ;வேறு நிறையைக் கொண்டுள்ளதாக அவர் கூறினார்.
இந்த தேடுதலின்போது 06 தற்கொலை அங்கிகளுடன் ஆர்.பி.ஜி- 1, தொலைத்தொடர்பு சாதனம் -1, ரீ56 ரக துப்பாக்கி ஒன்றும் மீட்க்பட்டுள்ளன என்றும் அவர் மேலும் குறிப்பிட்டார்.
0 comments :
Post a Comment