நபியை அவமதிக்கும் வகையில் வாசகம்.பெண்கள் பள்ளியை கொழுத்திய முஸ்லீம்கள்
பாகிஸ்தானில் முகமது நபியை அவமதிக்கும் வகையில் வாசகம் இடம்பெற்றதால், பெண்கள் பள்ளிக்கூடம் முஸ்லீம்களால் சூறையாடப்பட்டு பொருட்களும் தீ வைத்து எரிக்கப்பட்டுள்ளது.
பாகிஸ்தானின் லாகூரில் வரலாற்று பிரசித்த பெற்ற மசூதி அருகே பெண்கள் உயர்நிலை பள்ளிகூடமொன்று செயல்பட்டு வருகிறது.அப்பள்ளியிலேயே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
சமீபத்தில் பள்ளியில் நடந்த தேர்வில், கேள்வித்தாளில் முகமது நபியை அவமதிக்கும் வகையில் வாசகம் இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகின்றது
இதனால் கோபமடைந்த ஜமாத்–உத்–இஸ்லாமிக் மாணவர் இயக்கத்தினரும், மாணவிகளின் பெற்றோரும் ஆவேசத்துடன் பள்ளி முன்பு திரண்டு போராட்டம் நடத்தினர். இதன்போது பொலிசார் விரைந்து சென்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களை கலைத்தனர்.
இவர்களில் ஒரு பகுதியினர் திடீரென்று பள்ளிக்குள் நுழைந்து நிர்வாகியை தேடினர். அவர் சிக்கவில்லை. இதனால் அங்குள்ள 3 கட்டிடங்களில் இருந்த மாணவிகளை வெளியேற்றினார்கள்.
பின்னர் அந்த கட்டிடத்தில் நுழைந்து பொருட்களை அடித்து சூறையாடினர். அங்கிருந்த மேஜை–நாற்காலிகள் மற்றும் பொருட்களை வெளியே போட்டு தீ வைத்தனர். பள்ளிக்கூட நிர்வாகி காரும் தீ வைத்து எரிக்கப்பட்டது.
இது தொடர்பாக லாகூர் பொலிசார் வழக்குப்பதிவு செய்து பள்ளிக்கூட அதிபர் அசிம் பாரூக், ஆசிரியர் அரீபா ஆகிய 2 பேரை கைது செய்தனர்.அத்துடன் பள்ளிக்கூடத்தில் சூறையாடல், தீ வைப்பில் ஈடுபட்ட சிலரையும் பொலிசார் தேடி வருகின்றனர்.
0 comments :
Post a Comment