ஜனாதிபதியுடன் புதிய தூதுவர்கள் உயர்ஸ்தானிகர்கள் சந்திப்பு
இலங்கையில் பணிபுரிவதற்காக புதிதாக உயர்ஸ்தானிகரும் மூன்று தூதுவர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை அலரி மாளிகையில் சந்தித்து தங்களுடைய நியமனக் கடிதங்களைக் கையளித்துள்ளனர்.
பங்களாதேஷின் இலங்கைக்கான புதிய உயர்ஸ்தானிகராக மொஹமட் சப்பிர் ரஹ்மான், பனாமாவின் இலங்கைத் தூதராக அராம் பீ. சிஸ்னெரொஸ் நெய்லர், ரஷ்ய தூதராக அலெக்ஸாண்டர் ஏ. கர்ஷாவா மற்றும் இந்தோனேஷியாவின் இலங்கைத் தூதராக ஹரிமவன் சுயிட்னோ ஆகியோரே புதிதாக நியமிக்கப்பட்டுள்ளவர்களாவர்.
0 comments :
Post a Comment