வெலிக்கடை முழுமையாக பாதுகாப்பு தரப்பின் வசம் ! பொலிஸ் பேச்சாளர் அறிவிப்பு
வெலிக்கடை சிறைச்சாலையின் நிலைமை வழமைக்கு கொண்டுவரப்பட்டுள்ளதாகவும் அங்கு ஏற்பட்ட அசாதாரணமான நிலையையைப் பொலிஸார் தமது முழுக்கட்டுப்பாட்டில் கொண்டு வந்தள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளரும் சிரேஷ் பொலிஸ் அத்தியட்சருமான பிரசாந்த ஜயக்கொடி தெரிவித்தார்.
வெலிக்கடை சிறைச்சாலைக் கைதிகளுக்கும் பாதுகாப்புத் தரப்பினருக்கும் இடையில் இன்று மாலை 5 மணியளவில் ஆரம்பித்த இந்த கலவரம் இரவு 9.30 மணியளவில் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாக பொலிஸார் உத்தியோக பூர்வமாக அறிவித்துள்ளனர்.
மேலும் இச்சம்பவத்தின் போது காயமடைந்த கைதிகள் உள்ளிட்ட சுமார் 40 பேர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
கைதிகளுடன் இடம்பெற்ற சண்டையில் காயமடைந்த பொலிஸ் விசேட அதிரடிப்படையின் தளபதிக்கு சத்திர சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு வருவதாக பாதுகாப்பு தரப்பு தகவல்கள் தெரிவித்தன.
வெலிக்கடை சிறைச்சாலையின் தலைமை சிறைக் காவலர் உட்பட பெருமளவான பொலிஸ் விசேட அதிரடிப்படையினல் சிறைச்சாலைக்குள் சிக்குண்டுள்ளனர் என்று தெரிவிக்கப்படுகின்றதோடு இவர்களை மீட்கும் நடவடிக்கைகள் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருவதாக பாதுகாப்பு தரப்பில் கூறப்படுகின்றது..
0 comments :
Post a Comment