பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த முன்னாள் புலி உறுப்பினர் ஒருவர் கைது.
மட்டக்களப்பு நீதிமன்றத்தினால் பகிரங்க பிடியாணை பிறப்பிக்கப்பட்டு, பொலிஸாரின் பிடியிலிருந்து தலைமறைவாகியிருந்த முன்னாள் விடுதலைப்புலி உறுப்பினர் கைது ஒருவர் காத்தான்குடி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி அஜித் பிரசன்ன தலைமையிலான குழுவினரால் நொச்சிமுனை ஆறாம் குறிச்சி பகுதியில் வைத்து, கைது செய்யப்பட்டுள்ளார்.
பல்குடியன் அல்லது கிளியரசன் எனும் இயக்கப் பெயரை கொண்ட குமாரசுவாமி லிங்கேஸ்வரன் என்ற முன்னாள் புலி உறுப்பினர், பல்வேறு கொள்ளை சம்பவங்களுடன் தொடர்பட்டிருக்கின்றார் என நீதிமன்று அறிவிக்கப்பட்டபோது இவருக்கு நீதிமன்று பிடியாணை பிறப்பித்திருந்தது.
துலைமைறைவாகியிருந்த இவரிடமிருந்து கொள்ளையிடப்பட்ட ஒன்றரை பவுன் எடை கொண்ட தங்கச்சங்கிலி பெண்கள் துவிச்சக்கர வண்டியொன்று, மவுன்டன் சைக்கிள், 10 கையடக்க தொலைபேசிகள், வீட்டு தளபாடங்கள் அடங்கிய பெருமளவு பொருட்களும், பொலிஸாரினால் மீட்கப்பட்டுள்ளதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
0 comments :
Post a Comment